செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

கோபியை பொங்க வைக்கப்போகும் பாக்யா.. போன் பேசி மாட்டிக்கொண்ட லவ்வர் பாய்

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் தினத்தை பாக்கியலட்சுமி குடும்பம் ராமமூர்த்தியின் கிராமத்து வீட்டில் கொண்டாட புறப்பட்டனர்.

அங்கு குடும்பத்தோடு சென்றிருக்கும் பாக்யாவிற்கு கோபியின் மீது சந்தேகம் எழத் தொடங்கிவிட்டது. ஏனென்றால் கிராமத்தில் பாக்யா குடும்பத்தினர் சந்தோசமாக தங்களது பொழுதை கழித்துக் கொண்டிருக்கும்போது, கோபி மட்டும் தனியே அமர்ந்து யாருடனோ கொஞ்சிக் குலவி பேசுவதை பாக்யா பார்த்துவிடுகிறார்.

இதனால் பாக்யாவின் கவனம் முழுவதுமே கோபியின் மீது திரும்ப, அதன்பிறகு கோபி யாருடன் இவ்வளவு நேரம் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார். அத்துடன் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில நாட்களாகவே கோபிக்கும் அவருடைய அப்பாவிற்கும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இவர்களுக்கு இடையே ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவும், அதை குடும்பத்தினரிடம் மறைப்பதாக பாக்யா குடும்பத்தினர் எண்ணுகிறார். ஆகையால் அது என்ன விஷயம் என்பதை தெரிந்து கொள்ள வீட்டில் இருப்பவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தவேளையில் கோபி ராதிகாவுடன் பொங்கல் தினத்தை கொண்டாட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் தொலைபேசியில் ராதிகாவுடன் கொஞ்சி குழவுகிறார். அத்துடன் கோபி பாக்யா விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்யும் முடிவில் இருப்பதால் தற்போது பாக்யாவிற்கு விஷயம் தெரிந்துவிட்டால், நிச்சயம் கோபியை ஒதுக்கி தள்ளி விடுவார்.

அதன் பிறகு சீரியலின் கதை வேறு கோணத்தில் நகர்ந்து விடும். இருப்பினும் பாக்யா வீட்டில் இருக்கும் ராமமூர்த்தி மற்றும் எழிலுக்கு கோபியின் தகாத உறவு தெரிந்தும் அதை எப்படி சமாளிப்பது மற்றும் பாக்யாவின் வாழ்க்கையை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணத்தில் என்ன செய்வது என்று திகைத்து நிற்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News