புதன்கிழமை, நவம்பர் 13, 2024

எல்லா படத்திலும் என்னோட கதி இதுதான்.. புலம்பும் விக்ரம் காயத்ரி!

நான்கு வருடங்களுக்குப் பின் உலகநாயகன் கமலஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் கமலஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, மைனா நந்தினி, காயத்ரி, சிவானி  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதில் கமலஹாசன் மட்டுமல்ல நடித்திருக்கும் எல்லா நடிகர்களும் தங்களுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டியதால், ஒவ்வொருவரையும் தனித்தனியாகவே சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் படத்தில் நடித்திருந்த காயத்ரி சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் விக்ரம் படத்தை குறித்து கேட்ட கேள்விக்கு அளித்த பதில் தற்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

அதாவது தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு எதிர்பாராதவிதமாக மறதிநோய் ஏற்பட்டு கடைசியில் காயத்ரி யார் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டு, அதன் பிறகு காயத்ரி பற்றிய ஞாபகம் விஜய்சேதுபதிக்கு வந்துவிடும். இந்த படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 2019 ஆம் ஆண்டு வெளியான ‘டீலக்ஸ்’ திரைப்படத்தில் காயத்ரிக்கு கணவனாக நடித்த விஜய் சேதுபதி திருநங்கையாக மாறி விடுவார்.

அதைத்தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காயத்ரி இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதிலும் தனது கணவர் பகத் பாசில், என்ன வேலை செய்கிறார் என்பதை கடைசிவரை புரிந்துகொள்ள முடியாமல் பரிதவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி இவர் நடித்த எல்லா படங்களிலும் கணவர்களை புரிந்து கொள்ளாத ஒரு மனைவியாக காயத்ரி தமிழ் சினிமாவில் வருகிறார் என்று ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.

இதற்கு சற்றும் அசராத காயத்ரி, ‘கணவருக்கும் எனக்கும் செட்டாகவில்லை’ என சகஜமாக பதிலளித்து ரசிகர்களை மேலும் கவர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் இன்னும் வித்தியாசமான கேரக்டர்களில் அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்றும் சில ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

வச்சிக்கிட்டா வஞ்சகம் செய்கிறேன் என சில பட வாய்ப்புகளை மட்டுமே வைத்திருக்கும் காயத்ரி, விக்ரம் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவரை வந்து சேரும் என ரசிகர்கள் போலவே அவரும் நம்புகிறார். எனவே இனிவரும் நாட்களில் வெளியாகும் படங்களில் காயத்ரி அடுத்தடுத்து கமிட்டாகி அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News