இயக்குனராக வெற்றி பெற்ற மனோபாலாவின் 6 படங்கள்.. காங்கேயனாக கால் பதித்த ரஜினி

தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், குணசித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் தான் மனோபாலா. அப்படிப்பட்ட இவர் 80,90களில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதில் இவர் இயக்கிய மறக்க முடியாத ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்: மனோபாலா இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு என் புருஷன் எனக்கு மட்டும்தான் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், சுகாசினி, ரேகா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் குடும்பத்தில் நடக்கக்கூடிய கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையால் இவரது குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார் என்பதை அடிப்படையாக வைத்து கதை அமைந்திருக்கும்.

Also read: இயக்குனர், தயாரிப்பாளர், நடிகருமான மனோபாலா காலமானார்.. காரணத்தைக் கேட்டு உறைந்து போன திரையுலகம்

மல்லுவேட்டி மைனர்: 1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் மல்லுவேட்டி மைனர் திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சீதா, ஷோபனா, செந்தில் மற்றும் வினு சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை ஆனது ஷோபனா திரையில் இருந்து விடுதலையாகி இவரின் கடந்த காலத்தை நினைவு கூறுவதில் இருந்து இக்கதை தொடங்கும்.

முற்றுகை: 1993ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் முற்றுகை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அருண்பாண்டியன், பானுப்பிரியா, ரஞ்சிதா, கீதா ஆகியோர் நடித்தார்கள். இதில் அருண் பாண்டியன் குற்றம் சாற்றப்பட்ட குற்றவாளியாக சிறையில் இருப்பார். பின்பு சிறையில் இருந்து தப்பி செல்வதிலிருந்து இக்கதை ஆரம்பிக்கப்படும். இப்படத்திற்கு சித்தார்த் இசை அமைத்திருக்கிறார்.

Also read: வரேன் சார் சொல்லிவிட்டு மறுநாள் தூக்கில் தொங்கிய சில்க்.. கண்கலங்கி பேசிய நடிகர்

சிறைப்பறவை: 1987 ஆம் ஆண்டு இயற்பெயர் மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ராதிகா, செந்தில் மற்றும் மலேசிய வாசுதேவன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் விஜயகாந்த் நேர்மையான போலீஸ் கேரக்டரில் நடித்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

ஊர்க்காவலன்: 1987 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் ஊர்காவலன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ராதிகா, பாண்டியன், ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி, காங்கேயன் என்ற கேரக்டரில் தன் சகோதரனின் கொலைக்கு நீதி கேட்டு போராடுவதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருக்கிறார்.

பிள்ளை நிலா: மனோபாலா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு பிள்ளை நிலா திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன், ராதிகா, ஜெய்சங்கர், நளினி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் திகில் திரைப்படமாக வெளியிடப்பட்டது. அத்துடன் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மனோபாலாவிற்கு வெற்றி கிடைத்தது.

Also read: சினிமாவை கலக்கி ஓய்ந்து போன 2 பிரபலங்கள்.. விஜயகாந்துக்கு கொடுத்த நான்கு த்ரில்லர் ஹிட்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்