அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட 6 ஜோடிகள்.. சிநேகனை மிஞ்சிய ஆர்யா

திருமண வயது வித்தியாசம் என்பது பொதுவாக 2, 3 வருடங்கள் தான் இருக்கும். ஆனால் சினிமாவில் உள்ள சில நடிகைகள் தங்களை விட 8 வயதை விட அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஈடுபாடு அல்லது வேறு ஏதோ ஒரு காரணங்களுக்காக இவ்வாறு திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அவ்வாறு அதிகம் வயது உடையவரை திருமணம் செய்துகொண்ட 6 நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

போனி கபூர், ஸ்ரீதேவி : 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை 1996 இல் திருமணம் செய்து கொண்டார். போனி கபூர், மோனா ஷோரியை முதலில் மணந்தார். அதன்பின்பு இரண்டாவதாக ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி இடையே 8 வயது வித்யாசமாம்.

பிரகாஷ் ராஜ், போனி வர்மா : பிரகாஷ் ராஜ் நடிகை லலிதா குமாரியை 1994 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேகனா, பூஜா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மனமொத்து பிரிந்தனர். அதன்பின்பு 2010இல் போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 13 வயது வித்தியாசம் உள்ளதாம்.

prakash-raj-marriage
prakash-raj-marriage

குமாரசாமி, குட்டி ராதிகா : இயற்கை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் குட்டி ராதிகா. இவர் சிறுவயதிலேயே ரத்னகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். அதன்பின்பு கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான குமாரசாமியை குட்டி ராதிகா திருமணம் செய்துகொண்டார். குட்டி ராதிகாவை விட 27 வயது மூத்தவராம் குமாரசாமி.

வேலு பிரபாகரன், ஷெர்லி தாஸ் : இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் வேலு பிரபாகரன். இவர் தன்னுடைய 60 வயதில் தன் திரைப்படங்களில் முக்கிய வேடமேற்று நடித்த ஷெர்லி தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிட்டத்தட்ட 30 வருட வயது வித்தியாசம் உள்ளதாம்.

velu-prabharan
velu-prabharan

ஆர்யா, சாயிஷா : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் ஆர்யா. இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவுக்கு 38 வயதில் திருமணம் ஆனது. அப்போது ஆயிஷாவுக்கு 21 வயது. கிட்டத்தட்ட 17 வயது வித்தியாசத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சினேகன், கன்னிகா : தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் ஆசிரியராக பணியாற்றியவர் சினேகன். இவர் நடிகை கன்னிகா ரவியை 8 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 43 வயதான கவிஞர் சினேகன், 27வயதான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் 16 வயது வித்தியாசம் உள்ளது.

Next Story

- Advertisement -