புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

பல படங்களில் நடித்தும் பிரயோஜனப்படாமல் போன 6 நடிகர்கள்.. ஆனாலும் சின்னத்திரையில் முத்திரை பதிக்கும் குணசேகரன்

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியமான கதாபாத்திரம் என்றால் ஈஸியாக மக்களிடம் பிரபலமாகி விடுவார்கள். இது தவிர்த்து சில நடிகர்கள் 100 படங்களில் நடித்தும் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரம் அமைந்ததால் அந்த நடிகர்கள் பிரயோஜனப்படாமல் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

ஆடுகளம் நரேன்: இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணச்சித்திர நடிகராக சினிமாவில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அத்தனை படங்கள் நடித்து இருந்தாலும் ஆடுகளம் படத்தில் ரத்னசாமி என்ற கேரக்டரில் நடித்த பின்னரே ஆடுகளம் நரேன் என்று பரிச்சயமானார். இதனைத் தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜிகர்தண்டா போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் வரை இவரை தமிழ் சினிமா கவனிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.

ஜார்ஜ் மரியன்: இவர் நகைச்சுவை நடிகராக சினிமாவில் கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவரை பெயர் சொன்னால் நமக்கு யாரு ஜார்ஜ் மரியன் என்று யோசிக்க தோன்றும் அளவுக்கு தான் தற்போது வரை இவருடைய கேரக்டர் இருந்து வருகிறது. அதாவது இப்படி சொன்னால் புரியும் கலகலப்பு படத்தில் கான்ஸ்டபிள் போலீசாக தலையில் அடிபட்டு கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். அதன் பின் கைதி படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு முக்கிய பொறுப்பாளராக இருந்து அங்கு இருக்கும் பசங்களை காப்பாற்றும் விதமாக இவருடைய கேரக்டர் இருந்திருக்கும். இப்படி கைவிட்டு எண்ணி சொல்லும் படியான படங்கள் மட்டும் தான் இவருக்கு ஓரளவுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

Also read: மாடர்ன் ரோலில் நடித்து மொக்கை வாங்கி 5 நடிகைகள்.. சரி வராதுன்னு கிராமத்து கேரக்டருக்கு திரும்பிய கனகா

கவண் கிருஷ்ணா: இவர் பெயர் சொன்னதும் நமக்கு யாரென்று ஞாபகத்துக்கு வராது அந்த அளவிற்கு தான் இவருடைய கேரக்டர் அமைந்திருக்கிறது. ஆனால் இவர் நடித்த படங்கள் சொன்னால் நம்மளால் இவரை அங்கீகரிக்க முடியும். ஆட்டோகிராப் படத்தில் சேரனுக்கு மலையாள நண்பராகவும், 5 ஸ்டார் படத்தில் கனிகாவை திருமணம் செய்து கொண்டு வேண்டாம் என்று போன மாப்பிள்ளை, அத்துடன் கவண் படத்தில் வில்லனுக்கு கைக்கூலியாகவும் வேலை பார்த்திருப்பார். இதுபோன்று சில சொல்லும் படியான படங்கள் மட்டும் தான் இவருக்கு நிலைத்திருக்கிறது. அதன்பின் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியாமலேயே சினிமா விட்டு போய்விட்டார்.

இளங்கோ குமாரவேல்: இவர் பெயர் சொன்னதும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சினிமாவில் யார் இந்த மாதிரி ஒரு கேரக்டர் இருக்கிறது என்று ஞாபகத்துக்கு வருதா என்ற பார்க்கலாம். ரொம்ப அபூர்வம் தான் சொன்னதும் கண்டுபிடிப்பது. ஆனால் இவர் 2001 இல் இருந்து 2022 வர பல படங்களில் நடித்திருக்கிறார். இவரை ஈஸியா சொல்லணும் என்றால் அபியும் நானும் படத்தில் பிரகாஷ்ராஜ் வீட்டில் ஒரு வேலை பார்க்கும் பாவப்பட்ட ஜீவனாக நடித்திருப்பார். அத்துடன் மதராசப்பட்டினம் படத்தில் டாக்ஸி டிரைவராகவும், உன் சமையல் அறையில் பிரகாஷ்ராஜின் மாமாவாகவும் நடித்திருப்பார்.

Also read: நடிப்பை தாண்டி விவசாயம் செய்யும் 5 நடிகர்கள்.. ரஜினி கூப்பிட்டு பாராட்டிய கபாலி கிஷோர்

எதிர்நீச்சல் மாரிமுத்து: இவர் ஒரு குணச்சித்திர நடிகர், வில்லன் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களில் சினிமாவில் பணி புரிந்திருக்கிறார். ஆனால் இவருக்கு அதில் எல்லாம் கிடைக்காத அங்கீகாரம் சின்னத்திரையில் மூலம் கிடைத்துவிட்டது என்ற சொல்லலாம். இவர் கண்ணும் கண்ணும், புலிவால் படங்களை இயக்கியிருக்கிறார். அத்துடன் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆனால் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் நடித்ததன் மூலம் எல்லா பக்கமும் குணசேகரன் என்று மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நடிகராக மாறிவிட்டார்.

சாம்ஸ்: சாம்ஸ் பெயரை கேட்டாலே அது யாரு என்று யோசிக்கும்படியான ஒரு கேரக்டர் தான். ஆனால் இவர் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்லணும் என்றால் அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் சந்தானத்தை அவ்வப்போது சீண்டிப் பார்த்து சொகுசு வாழ்க்கையே வாழ்ந்ததாக அவரை வெறுப்பேத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தேசிங்கு ராஜா படத்தில் இதயக்கனியின் நண்பராகவும் நடித்திருப்பார். இப்படி பல படங்களில் நடித்தும் புரோஜனம் இல்லாமல் போய்விட்டது.

Also read: பருத்திவீரனுக்கு பின் தொடர் மொக்கை வாங்கிய கார்த்தியின் 5 படங்கள்.. வந்தியத்தேவனை வச்சு செய்த  மணிரத்தினம்

- Advertisement -spot_img

Trending News