பருத்திவீரனுக்கு பின் தொடர் மொக்கை வாங்கிய கார்த்தியின் 5 படங்கள்.. வந்தியத்தேவனை வச்சு செய்த  மணிரத்தினம்

அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் கிராமத்தான் ஆகவே நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கார்த்தி, அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து 5 மொக்கை படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக வாய்ப்பு கொடுப்பதற்கு முன்பே அவரை நன்றாக வச்சு செய்து விட்டார். ஏனென்றால் அப்படி ஒரு பிளாப்பான படம் மணிரத்தினம் கார்த்திக் காம்போவில் வெளியானது. 

சகுனி: சங்கர் தயாள் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியானஇந்த படத்தில் கார்த்தி உடன் பிரணிதா, ரோஜா, சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் சந்தானம் மற்றும் கார்த்தியின் காம்போவில் மொக்க காமெடிகள் படத்தை  பார்ப்போரை எரிச்சல் அடைய வைத்தது. மேலும் சீரியசான படத்தை  நகைச்சுவையாக கொண்டு சென்ற கார்த்தியின் எதார்த்தமான நடிப்பு இந்த படத்தில் செல்லும்படியாகவில்லை. இதனால் படம்  வசூலில் பயங்கர அடி வாங்கியது

அலெக்ஸ் பாண்டியன்: சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா நடிப்பில் வெளியான ஆக்சன் படம் தான்  அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தில் குடும்ப செண்டிமெண்ட், காதல், சண்டைக் காட்சிகள் போன்றவை நிறைந்து இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் போனது. ஏனென்றால் இந்த படத்தில் கதாநாயகன்  பெரிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதியின் மகளான அனுஷ்காவை பணத்திற்காக கடத்துவார். அதன் பிறகு அவர் மீது காதல் ஏற்பட்டு அந்த ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவது போல் கதை அமைந்திருக்கும் இந்த கதையை ஏற்கனவே வேறு வேறு கோணத்தில் பார்த்ததால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது.அதனால் தான் படம் பயங்கர பிளாப் ஆனது. 

Also Read: அசர வைக்கும் வந்திய தேவனின் சொத்து மதிப்பு.. 25 படங்களில் இவ்வளவு கோடியா?

ஆல் இன் ஆல் அழகுராஜா: மீண்டும் சந்தானம், கார்த்திக் காம்பினேஷனில் வெளியான படம் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. இதில் கார்த்தி உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி நடத்துபவராகவும் இருப்பார். இதில் மக்கு கதாநாயகியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் மீது காதல் ஏற்பட்டு, கொஞ்சம் படத்தை கலகலப்பாக தான் கொண்டு சென்று இருப்பார்கள். ஆனால் தீபாவளிக்கு வெளியான இந்த படம் சில வாரத்திற்குள்ளேயே  திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது .

காற்று  வெளியிடை: மணிரத்தினம் எழுதி இயக்கிய படமா இது என ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு 2017 ஆம் ஆண்டு பயங்கர ஃபிளாப்பான படம் தான் காற்று வெளியிடை. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்திருப்பார். இதில் கார்த்தி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் படை அதிகாரி வருண் சக்கரவர்த்தியாக நடித்திருப்பார். விறுவிறுப்பாக செல்லும் கதைக்களத்தை கொண்ட படமாக இருந்தாலும் இந்த படம் ரசிகர்களுக்கு ஏனோ பிடிக்காமல் போய்விட்டது. இதனால் வசூலிலும் படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் கார்த்தியின் நடிப்பை பார்த்த பிறகு தான். பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை  மணிரத்னம் தூக்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால்  கார்த்திக்கு காற்று வெளியிடை என்ற ஃபிளாப் படத்தை கொடுத்த பெருமையும் மணிரத்தினத்தையே  சேரும்.

Also Read: சிறுத்தை படத்தில் நடித்த குட்டி திவ்யாவா இது? ரெடியான அடுத்த கதாநாயகி

தேவ்: கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி போட்ட காதல் திரைப்படம் தான் தேவ். இதில் கார்த்தி புதிய புதிய சாகசங்களை விரும்பும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அமெரிக்காவில் உள்ள தொழில் முனைவோராக இருக்கும் தன்னுடைய காதலியை பல எதிர்ப்புகளின் மத்தியில் எப்படி கரம் பிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. இதைத் தவிர வேறு எந்த சுவாரசியமும் இல்லை. இருப்பினும் 55 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் போஸ்டர் ஒட்டின காச கூட எடுக்க முடியாத அளவுக்கு பயங்கர ப்ளாக் ஆனது.

இவ்வாறு இந்த ஐந்து படங்கள் தான் பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பிளாப் ஆன ஐந்து திரைப்படங்கள் ஆகும். அதிலும் காற்று வெளியிடை என்ற படத்தில் மணிரத்தினத்தை நம்பி கார்த்திக்  களம் இறங்கினார். ஆனால் அவர் கார்த்தியை நன்றாகவே வச்சு செய்து விட்டார்.

Also Read: கிராமத்து மண் வாசனையுடன் கார்த்தி ஜெயித்த 5 படங்கள்.. குடும்பங்கள் கொண்டாடிய கடைக்குட்டி சிங்கம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்