Connect with us
Cinemapettai

Cinemapettai

udhayanidhi-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீ பாட்டு பாடுற, உதயநிதி நடிக்க கூடாதா.? சர்ச்சைக்குரிய பிரபலத்தை வெளுத்து வாங்கிய அனகோண்டா நடிகர்

உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு அவரைப் பற்றி விமர்சித்த சர்ச்சைக்குரிய பிரபலத்தை வெளுத்து வாங்கி உள்ளார் அனகோண்டா நடிகர்.

தற்போது நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பதை குறித்து எதிர்க்கட்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அதிலும் உதயநிதியை இனிமேல் படத்தில் நடிக்க கூடாது என்றும் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான விஷால் தற்போது அமைச்சர் ஜெயக்குமாருக்கு பேட்டி ஒன்றின் மூலம் சரமாரியாக பதிலடி கொடுத்திருக்கிறார் அனகோண்டா நடிகர் விஷால்.

Also Read: லோகேஷை பார்த்து பொறாமையில் பொங்கிய விஷால்.. லத்தி பட விளம்பரத்தில் போட்ட பெரிய ஸ்கெட்ச்

சமீபத்தில் பல மேடைகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் பாடல் மற்றும் சினிமா பாடலை பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் மட்டும் பாடலாம், ஆனால் உதயநிதி நடிக்க கூடாதா! முதலில் ஜெயக்குமார் பாடுவது நிறுத்தட்டும்.

அவர் பாடக்கூடாது என்று விஷால் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு ஒருவருடைய தனிப்பட்ட முடிவுகளில் மற்றவர்கள் தலையிடக்கூடாது. ‘ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்கக்கூடாது’ என ஏற்கனவே அறிந்து தான்  உதயநிதியும் ஏற்கனவே நேற்று அளித்த பேட்டியில், ‘இனி சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை’ என்றும் தெளிவாக தெரிவித்து இருந்தார்.

Also Read: மீண்டும் இணைய ஆசைப்பட்ட இயக்குனர்.. பட்ட அவமானத்தை மறக்காமல் நோஸ்கட் செய்த விஷால்

ஆகையால் இப்போது அவருடைய நெருங்கிய நண்பரான விஷால், 9 வருடங்களாக உதயநிதியை ஒரு அமைச்சராக பார்ப்பது கனவாக இருந்தது. அது இப்பொழுது நினைவாகி இருக்கும்போது, மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் உதயநிதியின் நெருங்கிய நண்பரான விஷால், அவரைப் பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பேட்டிகளின் மூலம் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பிறகு அரசியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் பல சர்ச்சைகள் கிளம்பி கொண்டிருக்கிறது. இதில் உதயநிதியின் நண்பரான அனகோண்டா நடிகர் விஷால் காரசாரமான விவாதத்தில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

Also Read: தேடிப் போய் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. விஜய்யுடன் ஒரு சம்பவம் இருக்கு, சஸ்பென்சை உடைத்த விஷால்

Continue Reading
To Top