ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

சீரியல் நடிகைகளை திருமணம் செய்வதே தவறு.. மீனாட்சியின் சுயரூபத்தை புட்டு புட்டு வைத்த செந்தில்

Actor Mirchi Senthil: தற்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் நாறி கிடப்பது சீரியல் பிரபலங்களான விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் பேட்டிகள் தான். இவர்கள் விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து சீரியலில் ஜோடியாக நடித்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான 15 நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.

பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம், ஆனால் அவர்களுக்குள் நடந்த அந்தரங்க விஷயங்கள் அனைத்தையும் மாறி மாறி ஒருவர் மற்றவரின் மீது பழி போட்டுக் கொண்டு தங்களை தாங்களே கேவலப்படுத்திக் கொள்கின்றனர். இதெல்லாம் பத்தாது என்று தற்போது திருமணமாகி 9 வருடமான பிறகு மிர்ச்சி செந்தில், சீரியல் ஆர்ட்டிஸ்ட்டை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பரபரப்பாக பேசியிருக்கிறார்.

Also Read: திறமை முக்கியமில்லை, டிஆர்பி தான் முக்கியம்.. விஜய் டிவி என் வாழ்க்கையே அழிச்சுட்டாங்க புலம்பும் பிரபலம்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்த மிர்ச்சி செந்தில், அந்த சீரியலில் கதாநாயகியாக மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஸ்ரீஜாவை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இவர்களது குழந்தையின் பெயர் ஸ்ரீ வல்லப் தேவ்.

இந்நிலையில் மிர்ச்சி செந்தில் தன்னுடைய மனைவியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீஜாவை குறித்து பல விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் செய்யும் மகா தவறு என்னவென்றால், அவர்கள் யாருடன் இணைந்து நடிக்கிறார்களோ அந்த கேரக்டர் போன்று தான் அந்த பெண் இருப்பார் என்கின்ற நினைப்பில் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

Also Read: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கேடு கெட்ட சகவாசத்தால் உயிரிழந்த பிரபல டிவி நடிகை.. சாவிற்கு காரணமான 5 பேர்

அப்படிதான் நானும் சரவணன் மீனாட்சி தொடரில் ஸ்ரீஜாவையும் மீனாட்சி ஆகவே பார்த்துவிட்டேன். அந்த சீரியலில் எதுத்து பேசாமல் அமைதியாக கோபப்படாமல் மாமியார் சொல்வது எல்லாம் அப்படியே கேட்பார் என நினைத்து தான் நானும் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அது எல்லாம் மீனாட்சி என்ற கதாபாத்திரத்திற்கு உரிய கேரக்டர்தான்.

இதை நான் கல்யாணத்திற்கு பிறகு தான் புரிந்து கொண்டேன். மீனாட்சியை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஸ்ரீஜாவை தான் திருமணம் செய்து கொண்டேன் என்பது கல்யாணத்திற்கு பிறகு தெளிவாக புரிந்தது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ஸ்ரீஜா வேறு, அது மீனாட்சி தான். ஸ்ரீஜா கேரக்டரே வேறு, நான் ஏதாவது சொன்னால் நீ என்ன எனக்கு சொல்வது என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர். ஸ்ரீஜா எடுக்கிற முடிவில் ஆணித்தரமாக இருப்பார். யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டார், அதற்காக வேலிட் பாயிண்ட் ஒன்றையும் வைத்துக் கொள்வார். நம்மை விட ரொம்பவே புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவார்.

Also Read: மீண்டும் கம்பேக் கொடுத்த ரோபோ சங்கர்.. நோயை விட கொடுமையானது இதுதான்

சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி அப்படி கிடையாது. நான் அந்த மீனாட்சியை தான் விரும்பினேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எனக்கு வேறு விதமாக அமைந்தது. இருப்பினும் காதலின் மகத்துவம் தெரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும் என்று மிர்ச்சி செந்தில் மறைமுகமாக தங்களது திருமண வாழ்க்கையில் இருக்கும் கசப்பான நினைவுகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News