ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கேடு கெட்ட சகவாசத்தால் உயிரிழந்த பிரபல டிவி நடிகை.. சாவிற்கு காரணமான 5 பேர்

Serial actress: சினிமா நடிகைகளின் திடீர் தற்கொலை என்பது இன்றுவரை விளக்க முடியாத மர்மமாகவே இருக்கிறது. பல நடிகைகளின் மரணம் நீதி கிடைக்காமல் மக்களால் மறந்தே போய் விடப்படுகிறது. நிறைய வழக்குகளில் மரணத்திற்கு யார் காரணம் என்று தெரிந்தும் கூட பணம் மற்றும் அதிகாரம் அதை மூடி மறைத்து விடுகிறது.

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கியவர் இந்த நடிகை. நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கு சினிமா என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்து வந்தது. இதற்காக கடுமையாக உழைக்கவும் செய்தார். தொகுப்பாளினியாக இருந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக சீரியல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Also Read:2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

இப்படி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வரும் வரை இவர் வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.  பிரபல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு இந்த நடிகைக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானார்கள். பெயர் மற்றும் புகழும் அதிகமாக கிடைத்தது. நன்றாக வளர்ந்து வந்த நேரத்திலேயே இந்த நடிகைக்கு ஆடம்பர வாழ்க்கை மீதும் கொஞ்சம் ஆசை அதிகமாகி விட்டது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்த இவர் கோடிக்கணக்கில் கார் மற்றும் அப்பாார்ட்மெண்ட் என அகல கால் வைத்தார். கொரோனா ஊரடங்கின்போது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், நடிகையால் மாதத் தவணை கணக்குகளை சமாளிக்க முடியாமல், தேவையில்லாமல் ஏற்பட்ட சகவாசத்தின் உதவியுடன் அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

Also Read:ஹீரோவை பாடாய்படுத்தும் சீரியல் நடிகை.. பட வாய்ப்புக்காக செய்யும் எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்

இந்த தொடர்புக்கு காரணமாக இருந்தவரையே காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ரசிகர்களுக்கு தெரிவித்தார் இந்த பிரபல நடிகை. கொரோனா ஊரடங்கு முடிந்து சினிமா ஷூட்டிங் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே நடிகை மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். மொத்த பழியும் நடிகையின் காதல் கணவன் மீது விழுந்தது. சீரியலில் ஹீரோவுடன் அதிக நெருக்கம் காட்டியதால் இருவருக்கும் மேற்பட்ட பிரச்சினை தான் இந்த மரணத்திற்கு காரணம் என வழக்கையும் முடிக்க பார்த்தார்கள்.

ஆனால் நடிகை இறந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அடுத்தடுத்து அவர் எதனால் இறந்தார் என வெளிவர ஆரம்பித்தது. இதில் முன்னாள் ஆட்சியில் இருந்த முக்கியமான எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் என ஐந்து பேரின் பெயர்கள் சிக்கி இருக்கிறது. இருந்தாலும் இவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அரசும் விட்டுவிட்டது. தற்போது நடிகையின் குடும்பம் மற்றும் நண்பர்கள் அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

Also Read:ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

- Advertisement -

Trending News