புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

ஈவு இரக்கமின்றி மக்களை கொன்று குவித்த கொடூர உலக தலைவர்கள்.. குலை நடுங்க வைக்கும் வரலாறு

உலகத்திலேயே தான்தான் என்ற தலை கணத்தில் மக்களை அடிமையை விட மோசமாக கொன்று குவித்த தலைவர்கள் பலர் உள்ளனர். ஈவு இரக்கமின்றி கொடூரமாக மக்களை கொன்று குவித்தனர்.

இந்த பட்டியலில் முதலிடம் அடால்ஃப் ஹிட்லர். இவர் வாழ்ந்த காலம் 1889-1945. இந்த உலகத்தையே ஆள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, ஆயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தவர். ஆனால் கடைசியில் தானே தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் இந்த மாவீரன்.

adolf-hitler
adolf-hitler

செங்கிஸ்கான், வாழ்ந்த காலம் 1206-1227 வரை. இவர் தனது இளம் பருவத்தில் அடிமையாக சில வருடங்களை கழித்தபிறகு மங்கோலியா பழங்குடியின மக்களை இணைத்து கொண்டு மத்திய ஆசியா மற்றும் சில பகுதிகளை வென்றார். இவரது கதாபாத்திரம் மிக கொடூரமான சைக்கோவாக தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர் தான் செல்லும் இடங்களில் வசிக்கும் மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

genghis-khan
genghis-khan

திமூர், இவர் வாழ்ந்த காலம் 1370-1405 வரை தெற்காசிய பகுதியில் ஒரு ராணுவ படையை தலைமை தாங்கி சென்றவர். பின்னர் இன்றைய ஈரான், சிரியா போன்ற பகுதிகளை ஆண்டவர். மனிதர்களை உயிருடன் மண்ணில் வைத்துப் புதைத்து அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டி, கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்தவர்.

இடியமீன், இவரின் ஆட்சிக் காலம் 1971-1979 வரை. உகாண்டாவின் அதிபராக இடியமீன் தன்னை தானே அறிவித்துக் கொண்டார். 8 ஆண்டுகளில், இவர் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்வதை போதையாக கொண்டிருந்தவர்.

idi-amin
idi-amin

அகஸ்டோ பினேசே, இவர் வாழ்ந்த காலம் 1973-1990 வரை. சிரியா அரசை அமெரிக்க உதவியுடன் 1973 ஆம் ஆண்டு தூக்கி வீசினார். இந்த காலத்தில் 35 ஆயிரம் பேர் மாயமானார்கள் என்றும், அவர்களை கடத்தி பல சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என்றும் வரலாறு உண்டு. மனிதர்களை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இருக்கும் பொழுது இவர் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News