பிக்பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னர் இவர் தான்.. 70% வாக்குகளை தட்டி தூங்கப்போகும் ஒரே போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் புதிய முயற்சியாக இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களில் சிலரை தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சில காரணங்களால் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை பாதியில் தொகுத்து வழங்க முடியாமல் போக அதன்பின்பு நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது.

இதில் விருந்தினராக கமலஹாசன் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வார இறுதியில் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பைனலுக்கு 5 பேர் செல்ல உள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை பார்பதற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தற்போது பாலா, ஜூலி, அபிராமி, நிரூப், சுருதி, தாமரை, ரம்யா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். ஜூலி மற்றும் பாலா முதல் இரண்டு இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அதிலும் பாலா முதல் இடத்தை பிடிப்பார் என பலரால் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால் பாலா பிக் பாஸ் சீசன் 4 இல் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதனால் பாலா தற்போது முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் 70% வாக்குகளை அவரை தட்டி தூக்குவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பல கடினமான போட்டிகளும், சவால்களும் நிறைந்திருக்கும். இதிலிருந்தே யார் வெற்றி பெற்று இறுதி சுற்றில் பங்கேற்கிறார்கள் என்பது இன்னும் சில நாட்களிலேயே தெரியவரும்.