Ghilli Re-Release Box Office: சொல்லி அடிச்ச கில்லி.. 2வது வார வசூல் விவரம், ஆட்டம் கண்ட அஜித் படங்கள்

Ghilli Re-Release Box Office: ‘சீறி அடிச்சா கில்லி பறக்கும், நா சீறி அடிச்சா விண்ணே பொளக்கும்’ என்ற வரியை கில்லி ரீ-ரிலீசுக்காகவே நா.முத்துக்குமார் எழுதிவிட்டார் போல. 20 வருஷத்துக்கு முன்னாடி ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் அடித்த கில்லி படத்தை இரண்டு வாரத்துக்கு முன்னாடி ரீ ரிலீஸ் செய்தார்கள்.

கில்லி படத்தை 20 வருஷமாக மாசத்துக்கு ஒரு தடவை சன் டிவியில் பார்த்து வளர்ந்த தலைமுறை தான் நாம். அப்படி இருந்தும் இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு குவியும் கூட்டம் தான் வாயை பிளக்க வைத்திருக்கிறது.

கொக்கர கொக்கரக்கோ, அர்ஜுனரு வில்லு போன்ற பாடல்களுக்கு தியேட்டரில் கொடுக்கப்படும் அலப்பறைகள் புல்லரிக்க வைக்கின்றன. தளபதி என்றாலே மேஜிக் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார் விஜய்.

விஜய் நடித்த லியோ படத்திற்கு இருந்த வரவேற்பை விட கில்லி படத்திற்கு பல மடங்கு வரவேற்பு இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்களே தெரிவித்து இருக்கிறார்கள். கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலேயே நான்கு கோடி வசூல் செய்து விட்டது.

அதாவது இந்த வருடத்தில் ரிலீஸ் ஆகி முதல் நாள் வசூல் முதல் ஐந்து இடத்தை பிடித்த படங்களில் மூன்றாவது இடத்தில் கில்லி இருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் இருக்கும் ரோகினி தியேட்டரில் மட்டுமே 80 ஆயிரம் டிக்கெட்டுகள் இதுவரை வித்து தீர்ந்ததாக அந்த தியேட்டர் உரிமையாளர் சொல்லி இருக்கிறார்.

அந்த அளவுக்கு இந்த கில்லி படத்தின் ரீ ரிலீஸ் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆகிய இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்போது வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. அந்த நிலவரப்படி இரண்டு வாரத்தில் இந்த படம் 30 கோடி வசூல் செய்திருக்கிறது.

2வது வார வசூல் விவரம், ஆட்டம் கண்ட அஜித் படங்கள்

இதுவே பெரிய சாதனை தான், இதைத் தாண்டி இன்னொரு சாதனையும் இருக்கிறது. விஜய் மற்றும் அஜித் எப்போதுமே சமகாலத்து போட்டியாளர்கள் தான். இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இன்று வரை பாரத போர் தான் நடத்தி வருகிறார்கள்.

கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இந்த அளவுக்கு கொண்டாடப்படுவதால் அஜித்தின் பெஸ்ட் இரண்டு படங்களை அவருடைய பிறந்த நாளுக்கு ரீ ரிலீஸ் செய்தார்கள். அஜித்துக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த தீனா மற்றும் அஜித்தின் இன்னொரு முகத்தை காட்டிய பில்லா இரண்டு படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனால் இந்த இரண்டு படங்களுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியை அடையவில்லை. ஒரு கோடி வசூலை தாண்டுவது பெரிய தர்ம சங்கடமாக ஆகிவிட்டது. ரீ ரிலீஸ் போட்டியிலும் விஜய் தான் இப்போது வென்று இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்