Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவரை தூக்கிவிட தான் பத்து தல படத்துல நடிச்சேன்.. சிம்பு உங்களை தூக்கிவிட தான் ஏஆர் ரகுமான் வந்தார் தெரியுமா?

பத்து தல படத்தில் சிம்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் இணைவதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி உள்ளது.

சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு அண்மையில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்போது பேசிய சிம்பு பத்து தல படத்தில் சிறிய கெஸ்ட் ரோலாக தான் நடிக்க ஆரம்பித்தேன், பின்பு அதுவே பெரிய கதாபாத்திரமாக மாறிவிட்டதாக கூறியிருந்தார். அதாவது நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்தது.

Also Read : ஒல்லியான சிம்புவை மறுபடியும் குண்டாக சொன்ன இயக்குனர்.. எரிச்சல் அடைந்து எஸ்டிஆர் செய்த செயல்

இப்போது சிம்புவின் மார்க்கெட் ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளது. கௌதம் கார்த்திக் நல்ல பையன் சினிமாவில் வளர என்பதற்காக சிம்பு பத்து தல படத்தில் நடிக்க சம்மதித்தார். அதேபோல் இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரமும் அருமையாக அமைந்துள்ளதாம்.

இந்நிலையில் சிம்புவை தூக்கி விடுவதற்காக தான் இந்த படத்தில் ஏஆர் ரகுமான் ஒப்பந்தம் ஆனாராம். அதாவது சிம்பு, ஏ ஆர் ரகுமான் கூட்டணி என்றாலே அந்த படம் ஹிட்டுதான். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம் படங்களை தொடர்ந்து கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு படம் வரை ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார்.

Also Read : நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு.. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

இவ்வாறு சிம்பு கேரியரின் முக்கியமான படங்களில் கண்டிப்பாக ஏ ஆர் ரகுமானின் இசை இருக்கும். அந்த வகையில் பத்து தல படத்தில் சிம்பு கமிட்டாகி உள்ளார் என்று தெரிந்தவுடன் இந்த படத்தில் இசையமைக்க ஏ ஆர் ரகுமான் சம்மதித்தாராம். மேலும் தனக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலாளாக வந்து நிற்பவர் ஏ ஆர் ரகுமான் தான் என பத்து தல ஆடியோ லான்ச்சில் சிம்பு கூறியிருந்தார்.

மேலும் கௌதம் கார்த்திக்கை தூக்கிவிட நினைத்து பத்து தல படத்தில் சிம்பு நடிக்க அவருக்காக ஏ ஆர் ரகுமான் வந்துள்ளார். இவ்வாறு ஒருவரின் நலன் கருதி இணைந்த இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பது உறுதியாகி உள்ளது. மார்ச் 30-யை எதிர்நோக்கி சிம்பு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Also Read : சிம்புவுடன் போட்டி போட தயாரான நடிகர்.. பத்து தலயுடன் வெளியாகும் 2 படங்கள்

Continue Reading
To Top