உடல் மெலிந்து போன விஷ்ணு விஷாலின் மகன்.. அப்பாவுடன் வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. ஆனால் முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற வித்தியாசமான கதை களத்தில் உருவான படங்களில் நடித்ததன் மூலம் தற்போது ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளார்.

தற்போது விஷ்ணுவிஷால் எஃப் ஐ ஆர் எனும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்காக தனது முழு உழைப்பையும் போட்டுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் எனவும் கூறியுள்ளனர்.

விஷ்ணு விஷால் பிரபல இயக்குனரின் மகள் ரஜினி என்பவரை நீண்ட வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடமாக காதலித்து வந்த இவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக தெரிவித்தார்.

vishnu vishal
vishnu vishal

அதன் பிறகு பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கையில் பல துன்பங்கள் வந்து செல்லும் அதே போலத்தான் சந்தோஷமும் வந்து செல்கிறது என பலமுறை கூறியுள்ளார்.

தற்போது இவர் அவரது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உண்மையான பாசம் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த பாசம் எப்போதும் மாறாதது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் விஷ்ணு விஷாலின் மகன் உடல் மெலிந்து காணப்படுவதாகவும் கூறி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்