படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்.. இதுலா இவருக்கு அசால்ட்டுப்பா

அவன் இவன் படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படம் எனிமி. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைக்க, ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த எனிமி படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாக படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தால் நடிகர் விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. எனவே விஷாலுக்கு பிஸியோதெரபிஸ்ட் வர்மா சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

vishal
vishal

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டு உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்