பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத விக்ரம்.. நீங்க சொல்ற சாக்கு ஏதும் நம்புற மாதிரி இல்ல

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் இந்நிகழ்ச்சியில் விக்ரமால் கலந்து கொள்ள முடியவில்லை. அதாவது திடீரென நெஞ்சுவலி காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்பு நடந்த கோப்ரா படவிழாவில் விக்ரம் பேசியபோது பொன்னியின் செல்வனில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றி பெருமையாக பேசி இருந்தார். இந்நிலையில் நேற்று பொன்னின் செல்வன் படத்திலிருந்து பொன்னி நிதி என்னும் பாடல் வெளியானது. இது வந்தியத்தேவனின் இன்ட்ரோ பாடலாக அமைந்துள்ளது.

இப்பாடலை ஏஆர் ரஹ்மான் தனது சொந்த குரலில் பாடி உள்ளார். சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியிலும் விக்ரம் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை எழுப்பியது.

ஆனால் விக்ரம் தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இவர் நடித்துள்ள கோப்ரா படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தான் பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரம் கலந்து கொள்ள முடியவில்லை என ஒருபக்கம் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தற்போது விக்ரம் பான் இந்திய நடிகர் என்பதால் அவரால் அடிக்கடி இந்த மாதிரி நிகழ்ச்சியில் எல்லாம் அழைக்க முடியாது என மணிரத்னமே பெருந்தன்மையாக கூறிவிட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இதெல்லாம் நம்பற மாதிரி இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News