செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க போராடும் சியான் விக்ரம்.. அடுத்தடுத்து வெளிவர உள்ள 3 படங்கள்

சியான் விக்ரம் என்றாலே கடின உழைப்பு என்பது தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவந்த ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தது.

இதனால் விக்ரம் மார்க்கெட் சரிய தொடங்கியது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளிவர உள்ளதாம். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் ஆக்ஷன், திரில்லர் கலந்த படமாக உருவாகி உள்ளது கோப்ரா.

இந்த படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் காணப்படுகிறார். கொரோனாவின் ஊரடங்கு சமயம் என்பதால் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் தாமதமாகிவிட்டது. கோப்ரா படத்தில் அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் தாமதம் ஏற்பட்டாலும் சியான் 60 அதற்கு முன்னதாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் 60 படம் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% முடிந்து விட்டதாக கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே சரிந்து போன மார்க்கெட்டை கண்டிப்பாக நிமிர்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் விக்ரம்.

இதனால் கோப்ரா, சியான் 60 மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களை மலைபோல் நம்பி உள்ளாராம். ஏற்கனவே தனது மகனின் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால் தான் விக்ரமுக்கு படங்கள் சரியாக ஓடவில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cobra-cinemapettai
cobra-cinemapettai
- Advertisement -

Trending News