Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரமையும் விட்டுவைக்காத பயில்வான் ரங்கநாதன்.. வரைமுறை இல்லாமல் வசைபாடுவதா?

vikram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ஒழுக்கம் மிக்க நடிகராகவும் வலம் வருபவர் சீயான் விக்ரம். ஆனால் அவரைப் பற்றி நடிகைகளுடன் சேர்த்து வைத்து பிரபலம் ஒருவர் மிகவும் கொச்சையாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அப்பா நடிகராக இருந்தாலும் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்துக்கொண்டு தானாகவே சினிமாவில் முன்னேறியவர் விக்ரம். ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்தவருக்கு பாலா மூலம் ஒரு நல்ல சினிமா வாழ்க்கை கிடைத்தது.

அந்த நன்றிக் கடனாக தான் தன்னுடைய மகன் நடிக்கும் முதல் படத்தை பாலா இயக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அந்தப் படமே இருவருக்குள்ளும் இருந்த நட்பை பிரித்து விட்டது என பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

இது ஒருபுறமிருக்க விக்ரம் எப்போதுமே நடிகைகளுடன் கண்ணியமாக நடந்து கொள்வார் என்ற செய்திகளே அதிகம் வந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு படத்திலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ரகசியமாக நெருங்கி பழகுவது விக்ரமுக்கு மிகவும் பிடிக்கும் என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் ஆரம்பத்திலிருந்தே தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் காதல் இல்லாத ரகசிய உறவில் இருப்பாராம். பெரும்பாலும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது எந்த விஷயமும் செய்ய மாட்டாராம். ஆனால் வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி புகுந்து விளையாடுவராம் விக்ரம்.

நாளுக்கு நாள் நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார் என பயில்வான் ரங்கநாதன் மீது குற்றச்சாட்டுகளும் எதிர்ப்புகளும் அதிகம் வந்த வண்ணம் உள்ளன.

vikram-cinemapettai-01

vikram-cinemapettai-01

Continue Reading
To Top