வசூல் வேட்டையாடும் விக்ரம்.. மிகப் பெரிய ஓப்பனிங்கை கொடுத்த ஆண்டவர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த விக்ரம் திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த பலரும் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரும் அளவுக்கு படம் சக்கை போடு போட்டு வருகிறது.

இதனால் படத்தை தயாரித்த கமல் உட்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று அனைவரும் நல்ல லாபத்தை பார்த்து வருகின்றனர். மேலும் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே 200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து தற்போது வரை விக்ரம் திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகிறது. இதுவரை கமல் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு உலக நாயகன் இந்த படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

மேலும் விக்ரம் திரைப்படம் தற்போது சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. கடந்த ஜூன் 3ம் தேதி உலக அளவில் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாகியும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாஸ் காட்டி வருகிறது. இதனால் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் கூட்டத்தால் திணறி வருகிறது.

தமிழ் சினிமாவில் இது ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு பெரிய நடிகரின் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் முதல் இரண்டு காட்சிகள் ரசிகர்களின் கூட்டத்தால் ஹவுஸ்புல்லாக இருக்கும். அதன் பிறகு வரும் அடுத்தடுத்த காட்சிகளில் சில மாறுதல்கள் இருக்கும்.

ஆனால் இந்த விக்ரம் படம் வெளியாகி இரண்டு காட்சிகள் முடிந்த பிறகு தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். இதுவே படத்தின் தரம் என்ன என்பதை பலருக்கும் உணர்த்தியுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட ஒரு வெற்றித் திரைப்படம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதன் மூலம் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வசூல் திரைப்படமாக மாறி இருக்கிறது. தற்போது வரை 400 கோடிக்கும் மேல் வசூலித்த விக்ரம் படத்தின் வசூல் இனி வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் ஆண்டவர் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்