ஆண்டவரை மொத்தமா வச்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. நீங்க ஓவரா கூவும்போதே நினைச்சோம்

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தற்போது அவரை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் மீண்டும் நடிப்புக்கு திரும்பி உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

அதிலும் படக்குழு படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தனர். மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் என்று அனைத்தும் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது.

இதனால் ரசிகர்கள் பலரும் படத்தை எப்போது தியேட்டரில் காண்போம் என்று மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

அதுமட்டுமல்லாமல் படத்தின் ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க படம் தொடர்பான பிரமோஷன்களும் களை கட்டி வந்தது. லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பல சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து மக்களின் எதிர்பார்ப்பை எகிற செய்து வந்தனர்.

அந்த அளவுக்கு பயங்கரமாக விளம்பரம் செய்யப்பட்ட விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்திற்கு சில நெகட்டிவ் கமெண்டுகளும் வந்து கொண்டிருக்கிறது.

அதிக அளவில் பிரமோஷன் செய்து ரசிகர்களை எதிர்பார்ப்பை எகிறச் செய்த விக்ரம் திரைப்படம் தற்போது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லோகேஷ் இந்தப்படம் கமலுக்கு மிகப்பெரிய என்ட்ரியாக இருக்கும் என்று கூறி விட்டு கடைசியில் அவரை நன்றாக வைத்து செய்து விட்டதாக கூறுகின்றனர்.

இந்தப் படத்தை தான் இத்தனை நாளாக எடுத்தீர்களா என்றும், நீங்கள் ஓவராக கூவும்போதே படம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் படத்திற்கான அதிகப்படியான பிரமோஷன் தான் தற்போது சில பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரஜினி, கமல், அஜீத் போன்ற நடிகர்களின் திரைப்படத்தை எல்லாம் ஓவர்டேக் செய்து வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்த்த விக்ரம் திரைப்படம் தற்போது சில நெகட்டிவ் கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்