அஜித்தின் மங்காத்தா சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் விஜய் சேதுபதி.. செம வைரலாகும் மாஸ் புகைப்படங்கள்

மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி வைத்து விட்டதாக கூறியுள்ளது தான் தற்போது பல தயாரிப்பாளர்களும் அச்சத்தை கொடுத்துள்ளது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்தது. நடிப்பை வெளிபடுத்த கிடைத்த அந்த கதாபாத்திரத்தில் பவானியாகவே வாழ்ந்து காட்டினார் விஜய் சேதுபதி.

இதன் காரணமாக தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் எக்கச்சக்கமாக வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் நேரடி தெலுங்கு படமாக வெளியான திரைப்படம் உப்பெண்ணா. இந்த படத்தில் 17 வயதான நாயகிக்கு ராயணம் என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிக கொடூரமாக இருந்ததாம்.

இதனைப் பார்த்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் புஷ்பா என்ற படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி பக்காவாக இருப்பார் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

vijaysethupathi-cinemapettai
vijay sethupathi-cinemapettai

இப்படி பல மொழிகளிலிருந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதேபோல்தான் அமீர்கான் பட வாய்ப்பும் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் மங்காத்தா படத்தில் அஜீத் வந்த சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் விஜய் சேதுபதி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

vijaysethupathi-cinemapettai-01
vijaysethupathi-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்