பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யை கவர்ந்த பிரபலம்.. அனேகமா அடுத்த படத்திலும் இவரை எதிர்பார்க்கலாம்

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளன.

இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து யோகி பாபு, விடிவி கணேஷ், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், மலையாள நடிகை அபர்ணா தாஸ், இயக்குனர் செல்வராகவன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றனர்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காதாம். பக்கா கமர்சியல் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் உடன் வரும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடிவி கணேஷ்.

பொதுவாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடிய விடிவி கணேஷ் விஜய்யுடன் இணைந்து படத்தில் நடிப்பதைக் காட்டிலும் படப்பிடிப்பு தளங்களில் அவருடன் உட்கார்ந்து நிறைய நேரம் செலவழித்து வருகிறாராம்.

மேலும் அவருடைய ஜாலியான பேச்சு விஜய்யை மிகவும் கவர்ந்துள்ளதாம் கூறுகின்றனர். இதனால் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் விடிவி கணேஷை அழைத்து வைத்து ஜாலியாக பேசி நேரத்தை செலவிட்டு வருகிறாராம் விஜய்.

விஜய்க்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுப்பார் என்பது தெரிந்ததே. அதுவும் விடிவி கணேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால் அனேகமாக அவருக்கு அடுத்த படமோ அல்லது அடுத்த படத்தில் வாய்ப்போ கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் பீஸ்ட் வட்டாரங்கள்.

vtv-ganesh-at-beast
vtv-ganesh-at-beast
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்