ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜயாவுக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியா போச்சு.. மீனா குடும்பத்தை மட்டம் தட்டி பேசிய முத்துவின் அம்மா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து எதற்காக மீனாவின் தம்பி கையை உடைத்தார் என்று அண்ணாமலை ரகசியமாக கேட்கிறார். அப்பொழுது எல்லாத்தையும் சொல்ல வரும் முத்து, மீனா வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் எதுவுமே சொல்லாமல் மறைத்து விடுகிறார். அத்துடன் நான் அடித்தது தப்புதான் இனிமேல் யார் மேலயும் கை வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

பிறகு அண்ணாமலை, மீனாவிடம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது அது ரொம்ப நாளைக்கு மறைச்சு வைக்க முடியாது என்று கூறிவிடுகிறார். அடுத்து மனோஜ் வீட்டிற்கு வருகிறார், வந்ததும் ரோகிணி கேள்வி மேல் கேள்வி கேட்டு அவருக்கு டார்ச்சர் கொடுக்கிறார். ஆனாலும் மனோஜ் எதையும் விட்டுக் கொடுக்காமல் ஏதோ கலெக்டர் வேலை பாக்குற மாதிரி ஓவரா பில்டப் கொடுத்து பேசுகிறார்.

அடுத்ததாக முத்து அவருடைய சொந்த காரை விற்று நண்பர்களுக்கு உதவியதால் தற்போது ஆட்டோ ஓட்டும் நபராக மாறிவிட்டார். இதனை தொடர்ந்து கார் செட்டுக்கு வந்து நண்பர்களை பார்த்து இதை வைத்து கூட என்னால வாழ முடியும் என்று சொல்லிவிட்டு இந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்ல வேண்டாம். தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார் என்றும் நண்பரிடம் சொல்லிவிட்டு முத்து கிளம்பி விடுகிறார்.

Also read: முத்துவிடம் இருந்து எஸ்கேப் ஆன ரோகினி.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மீனா, மனோஜ்

அதற்கு பிறகு மீனாவின் அம்மா மற்றும் தங்கை, விஜயா வீட்டுக்கு வருகிறார். வந்ததும் அண்ணாமலையை பார்த்து கணவர் இறந்து போய் ஒரு வருடம் ஆகப் போகிறது. அதனால் தவசம் பண்ண வேண்டும் என்று கூறுகிறார். உடனே விஜயா அதை எதுக்கு இங்க வந்து சொல்றீங்க. அவரே உடம்பு சரியில்லாமல் இருக்கிறார், இப்பொழுது இதை வந்து இங்கே சொல்லனுமா என்று சொல்கிறார்.

அத்துடன் உங்கள் கணவர் அல்பாய்ஸ்ல போன கதையெல்லாம் இப்ப இங்க தேவையா என்று ரொம்பவே வாய் கொழுப்பாக பேசுகிறார். இதனை கேட்ட மீனா மற்றும் அம்மா ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். விஜயாவை பொறுத்தவரை எப்பொழுதும் மீனா குடும்பத்தை மட்டம் தட்டி அவமானப்படுத்த வேண்டும். பணக்கார மருமகள்களுக்கு தூபம் போட வேண்டும்.

அடுத்ததாக மனோஜ் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு பிரச்சனை வருவதால் கிடைத்த சர்வர் வேலையும் அவரை விட்டு போகப்போகிறது. இதையெல்லாம் தாண்டி முக்கியமான கதையாக இருக்கும் ரோகினி பற்றிய விஷயங்கள் தெரிய வர வேண்டும். அப்பொழுதுதான் விஜயாவின் ஆட்டம் கொஞ்சமாவது அடங்கும். கூடிய விரைவில் இதை நோக்கி கதை நகர்ந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.

Also read: விஜயாவின் ஆசையில் மண்ணை வாரி போட்ட மீனா.. முத்துவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் ஆசை மனைவி

- Advertisement -

Trending News