20 வருடங்களுக்கு பிறகும் கில்லி கொண்டாடப்பட இப்படி ஒரு காரணமா.? என்னய்யா நடக்குது இங்க!

Ghilli Re-Release Celebration: இந்த செய்தியின் தலைப்பை பார்த்ததும் விஜய் பத்தி ஏதோ நெகட்டிவா எழுதி இருக்காங்கன்னு நினைச்சா அது தான் இல்ல. நிறைய பேருக்கு கில்லி படம் 20 வருடங்களுக்கு பிறகு ஏன் இந்த அளவுக்கு கொண்டாடப்படுதுன்னு சந்தேகம் இருக்கு.

சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட வேட்டையாடு விளையாடு, 3, 7 ஜி ரெயின்போ காலனி என்று நிறைய படங்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. ஆனால் கில்லி இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய் விட்டது.

இனி வரும் விஜயின் புது படங்களுக்கு கூட. இந்த அளவுக்கு தியேட்டரில் ரெஸ்பான்ஸ் இருக்குமா என்பது சந்தேகம்தான். படத்தின் ஒவ்வொரு காட்சியும், பாடல்களும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

இன்னொரு பக்கம் கிளைமாக்ஸ் காட்சியில் காரப்பொறி கேட்கும் தனலட்சுமி, முத்துப்பாண்டி தரப்பிலிருந்து அவர் ஹீரோவா இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு புது கில்லி பட கதை என சுவாரஸ்யமான பேச்சுக்களும் சமூக வலைத்தளத்தில் இருக்கிறது.

20 வருடத்திற்கு முன்னாடி ரிலீசான ஒரு படம், மாசத்துக்கு ஒரு தடவை யாவது சன் டிவியில் பார்த்திடலாம். இருந்தும் இவ்வளவு கொண்டாட்டம் தேவையா என்று கேட்டால், உண்மையாகவே அந்த படம் கொண்டாடப்பட வேண்டிய படம் தான் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஏன் இந்த நேரத்தில் இவ்வளவு கொண்டாடப்படுகிறது, யார் இந்த படத்தை இப்படி கொண்டாடுகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வி. கில்லி படம் இந்த நேரத்தில் திருவிழாவை போல் கொண்டாடப்படுவதற்கு முதல் காரணம் விஜய் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என்று சொன்னது தான்.

விண்டேஜ் விஜய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோவாக இருந்து, இப்போது 2கே கிட்ஸ்களுக்கும் ரொம்ப பிடித்த நடிகர் இவர். 2கே கிட்ஸ்களுக்கு அவர்களுடைய ஃபேவரிட் ஹீரோ நடித்த பேவரைட் படம் கில்லியை தியேட்டரில் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது, அதை எப்படி மிஸ் பண்ணுவார்கள்.

அதனால் தான் கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜயின் தீவிர ரசிகர்கள், சினிமாவை விட்டு விலகும் தங்கள் தலைவனை போதும் போதும் என்ற அளவுக்கு கொண்டாட வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.

ஆனால் இதில் லாபம் பார்ப்பதற்கு என்று தனியாக முக்கிய புள்ளிகளும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். விஜய் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் கிங் மேக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த 15 வருடங்களாக விஜய்யை சுற்றி தான் சினிமா பொருளாதாரம் இருக்கிறது.

விஜய் படத்தின் வெற்றியை தாண்டி விடுமா, விஜய் படத்தின் வசூலை நெருங்கி விட்டதா என்று தான் மத்த ஹீரோக்களின் படங்களை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது திடீரென சமூக சேவை செய்யப் போகிறேன், சினிமா எனக்கு வேண்டாம் என அசால்ட்டாக சொல்லிவிட்டார்.

இனி தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு போட்டி என்று யாருமே இருக்க மாட்டார்கள். இதனால் தான் சரியான நேரத்தில் கில்லி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்து, ரசிகர்கள் கொண்டாடுவதை ஓவர் அலப்பறையை கூட்டுகிறார்கள்.

இதன் மூலம் விஜய்க்கு கூட நம் ரசிகர்களை ஏமாற்ற கூடாது, இந்த கொண்டாட்டம் நம்மால் கெட்டுப் போய் விடக்கூடாது என்ற எண்ணம் வரும். இதன் மூலம் அடுத்த அடுத்த படங்களுக்கு அவர் ஓகே சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

இதுதான் பொதுநலத்தில் சுயநலம் என்பது. விஜய் ரசிகர்களுக்கு அவரை கொண்டாட வேண்டும், 2K கில்லி படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும், கில்லி படத்தை பார்த்து விட்டோம் என்று இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட ஒரு கூட்டம், சினிமா விநியோகஸ்தர்களுக்கு விஜய் சினிமாவை விட்டுப் போகக்கூடாது. மொத்தத்துல ராதாரவி ஸ்டைல்ல சொல்லனும்னா கூட்டி கழிச்சு பார்த்தா எல்லா கணக்கும் சரியா தான் வருது.

- Advertisement -spot_img

Trending News