முத்துவிடம் இருந்து எஸ்கேப் ஆன ரோகினி.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மீனா, மனோஜ்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து தன்னுடைய நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும் அதை சரி பண்ண முயற்சி செய்தார். ஆனால் சிட்டி, உன்னால் பணத்தை கொடுக்க முடியவில்லை என்றால் என் காலில் விழுந்து மன்னிப்பு கேளு உன் நண்பர்கள் இருக்கும் பக்கமே நான் திரும்பி பார்க்க மாட்டேன் என்று தெனாவட்டாக கூறினார்.

உடனே வீட்டிற்கு போன முத்து, எல்லா பிரச்சினையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் யோசனையில் இருக்கிறார். அதே நேரத்தில் மீனாவும் எதற்காக முத்து இப்படி பண்ணுகிறார் என்று தெரியாமல் முழிக்கிறார். மீனா, முத்து மீது கோபத்தில் இருப்பதால் எதுவுமே பேசாமல் தூங்கி விடுகிறார்.

பிறகு முத்து நண்பர்களுக்கு உதவும் வகையில் அவருடைய சொந்த காரை விற்று சிட்டி இடம் மொத்த பணத்தையும் கொடுத்து விடுகிறார். இனிமேல் வாடகை காரை ஓட்டுவதற்கு முத்து முடிவெடுத்துவிட்டார். இதற்கிடையில் சுருதி, ரவியுடன் சேர்ந்து சைக்கிளில் போகும்போது சுருதியின் அம்மா அப்பா பார்த்து பொண்ணு ரொம்பவே கஷ்டப்படுகிறார் என்று வழக்கம் போல் தவறாக புரிந்து கொண்டார்கள்.

Also read: பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் விஜயா.. சைடு கேப்பில் ரொமான்ஸில் புகுந்த முத்துவின் அப்பா

இனி இதை வைத்து ஒரு பிரச்சனையை உருவாக்கப் போகிறார்கள். அடுத்ததாக மனோஜ் ஹோட்டலில் வேலை பார்க்கும் பொழுது அங்கு பார்க் நண்பர் ஒருவர் வந்து பார்த்து விடுகிறார். யாருக்கும் தெரியாமல் கவுரமாக வேலை பார்க்க வேண்டும் என்று மனோஜ் திருட்டுத்தனமாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிடைத்த இந்த வேலையும் தற்போது வந்த நபரால் போகப்போகுது.

கடைசியில் வேலை இல்லாமல் மறுபடியும் குடும்பத்தின் முன் மாட்டிக் கொண்டு முழிக்க போறார். ஆனால் யார் மாட்டனுமோ அவர்கள் கடைசி வரை மாட்டாமல் எஸ்கேப் ஆகி வருகிறார். ஒட்டு மொத்த குடும்பத்தையும் முட்டாளாக்கி, ஒரு பையன் இருப்பதை மறைத்து ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ரோகிணியின் முகத்திரை கிழிந்தால் மட்டும் நாடகம் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

Also read: விஜயாவின் ஆசையில் மண்ணை வாரி போட்ட மீனா.. முத்துவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் ஆசை மனைவி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்