Madhampatty Rangaraj: சொந்த கேரவன், பல கோடி சொத்து.. இளசுகளின் ரோல் மாடலாக கலக்கும் CWC-5 மாதம்பட்டி ரங்கராஜின் வெற்றி ரகசியம்

Madhampatti Rangaraj
Madhampatti Rangaraj

Madhampatty Rangaraj: இப்போது எங்கு திரும்பினாலும் மாதம்பட்டி ரங்கராஜின் பேச்சாக இருக்கிறது. இதற்கு முன்பே இவர் மக்கள் மத்தியில் வெகு பிரபலம் தான்.

எப்படி என்றால் டாப் நடிகர்களின் வீட்டு விசேஷங்கள் இவர் இல்லாமல் நடைபெறாது. அப்படி அனைவர் மனதிலும் இடம் பிடித்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக களம் இறங்கியுள்ளார்.

இவருடைய அமைதியான பேச்சும் அணுகுமுறையும் ரசிகர்களை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்துள்ளது. அதேபோல் சிறு வயதில் பல கஷ்டங்களை தாண்டி வந்த இவர் இன்றைய இளசுகளுக்கு ஒரு ரோல் மாடலாகவும் உள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜின் வெற்றி ரகசியம்

ஸ்கூல் யூனிபார்ம் வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் இருந்த இவர் இன்று பல கோடிகளின் அதிபதியாக இருக்கிறார். அதேபோல் இவருக்கு சொந்தமாக கேரவன் உள்ளது.

இதை அவர் தன்னுடைய தொழிலுக்காகவும் தன் சொந்த வசதிக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார். எப்படி என்றால் விதவிதமான உடைகள் அணிவதில் இவருக்கு அலாதி பிரியம்.

அதனாலேயே தனக்கு தேவையான உடைகள் மற்றும் பிற பொருட்களை உடனே வாங்கி விடுவாராம். அது தனக்கு ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் தருவதாக அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதை எல்லோரும் பின்பற்றினால் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அதே போல் நம் இலக்கை நோக்கி ஓடினால் வெற்றி நிச்சயம் என அவர் இன்றைய தலைமுறைக்கு தேவையான வெற்றியின் ரகசியத்தையும் சொல்லியுள்ளார்.

Advertisement Amazon Prime Banner