ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜயாவின் ஆசையில் மண்ணை வாரி போட்ட மீனா.. முத்துவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் ஆசை மனைவி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து, மீனாவின் தம்பி கையை உடைத்தது தவறு என்று ஒட்டு மொத்த குடும்பமும் முத்துவை தவறாக நினைக்கிறார்கள். அத்துடன் முத்துவின் அப்பாவும் என்னதான் இருந்தாலும் அடிதடியில் இறங்கி அவனை படுத்த படுக்கையாக ஆக்கினது தப்புதான் என்று முத்துவை கண்டிக்கிறார்.

அத்துடன் நீ செய்த தவறுக்கு அவர்களிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு இடையில் அங்கே இருந்து வேடிக்கை பார்க்கும் ரோகினி, மனோஜ் மற்றும் விஜயா அனைவரும் நாட்டாமை பண்ண வந்து விட்டார்கள். ரவியும் நீ பண்ணுனது தப்புதான் என்று சொல்லி நியாயம் கேட்கிறார். அதற்கு முத்து எப்பொழுதுமே தப்பு பண்ணுறவங்க ஒருத்தங்க, கடைசில மாட்டிகிட்டு முழிக்கிறது நானா தான் இருக்கிறேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

இப்படி முத்து சொல்லும் பொழுது மனோஜ் முகம் அப்படியே மாறுகிறது. இதில் ஏதோ ஒரு ரகசியம் அடங்கி இருப்பது போல் தெரிகிறது. அதாவது சின்ன வயசுல மனோஜ் செய்த தவறுதான் முத்துமேல் விழுந்திருக்கும். அதனால் தான் விஜயா, முத்துவை இப்பொழுது வரை வெறுத்து வருகிறார் என்பது போல் தெரிகிறது.

Also read: தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி

அடுத்ததாக மீனா, மாமனாரிடம் நாங்கள் ஏழை குடும்பத்தில் உள்ளவர்கள் தான் ஆனால் அதற்காக உழைச்சு தான் மானத்தோடு வாழ்ந்து வருகிறோம் என்று வேதனையை கொட்டித் தீர்க்கிறார். அதே மாதிரி முத்துவும் நான் செய்தது தவறு கிடையாது நான் மன்னிப்பும் கேட்க முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் பார்த்த விஜயா, இவர்களுடைய சண்டையை வைத்தே வீட்டை விட்டு முத்துவையும் மீனாவையும் வெளியே அனுப்ப வேண்டும் என்று பிளான் பண்ணுகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி விஜயா தோழிக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி, முத்து குடித்துவிட்டு மீனாவை நல்லா அடிக்கப் போகிறார். இதை வைத்தே பெரிய பிரச்சினையாக்கி அவர்களை வீட்டை விட்டு அனுப்பி விடுவேன் என்று சந்தோசத்தில் பினாத்துகிறார். இதற்கிடையில் மீனாவிடம், முத்து பேசுவதற்கு முயற்சி எடுக்கிறார். ஆனால் மீனா கொஞ்சம் கோபத்தில் இருப்பதால் இதுவே எங்க அப்பா எங்களுடன் இருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா என்று கேட்கிறார்.

உடனே முத்து நான் உன் அப்பா இடத்திலிருந்து தான் இதையெல்லாம் செய்கிறேன் என்று சொல்கிறார். ஏற்கனவே மீனாவிற்கு முத்துமேல் தப்பு இருக்காது என்று ஒரு பக்கம் நினைப்பு இருக்கிறது. அந்த வகையில் தற்போது முத்து இப்படி பேசுவதை பார்த்ததும் மீனா உண்மை என்ன என்று தெரிஞ்சுக்க முயற்சி எடுக்கப் போகிறார். ஆக மொத்தத்தில் மீனா முத்து பிரிய வாய்ப்பு இல்லை. அத்துடன் விஜயாவின் ஆசையும் நிறைவேற போவதில்லை.

Also read: முத்துவிடம் கையும் களவுமாக சிக்கப் போகும் மச்சான்.. விஜயாவிடம் ஒத்து ஊதும் ரோகிணி, மீனாவிற்கு வரும் பிரச்சினை

- Advertisement -

Trending News