ஹீரோக்களை ஓரங்கட்டி.. ஞாயம்டா, நீதிடா என நாட்டாமை விஜயகுமார்காக ஓடிய 6 படங்கள்!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் கதாநாயகன் கதாநாயகிகளை விட குணச்சித்திரம் கதாபாத்திரங்கள் வலுவாக பேசப்பட்டு ரசிகர்களின் மனதை எளிதாக கவர்ந்து விடும். அவர்களுக்காகவே சில படங்கள் தியேட்டர்களில் தாறுமாறாக ஓடி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அந்த வகையில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் குறிப்பாக நாட்டாமை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திய நடிகர் விஜயகுமார் அவர்களுக்காகவே ஓடிய ஏழு படங்களை பார்ப்போம்.

சேரன் பாண்டியன்: 1991-ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் எழுதி இயக்கிய இந்தப்படத்தில் சரத்குமார், நாகேஷ், ஆனந்தபாபு, விஜயகுமார், மஞ்சுளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக விஜயகுமார் பெரிய கவுண்டர் அதாவது கிராமத்து தலைவராக இந்தப்படத்தின் கதாநாயகன் சரத்குமாரை மிஞ்சும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி படத்தை சூப்பர் ஹிட் அடிக்க செய்திருப்பார்.

நாட்டாமை: படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு சரத்குமார் மற்றும் விஜயகுமார் இருவரும் நாட்டாமையாக தங்களது கம்பீரமான நடிப்பை இந்தப் படத்தில் வெளிக்காட்டி இருப்பார்கள். குறிப்பாக சரத்குமாரை விட விஜயகுமாருக்கு நாட்டாமை கெட்டப் கச்சிதமாக பொருந்தி, படத்தில் இவர் தனது கம்பீரமான குரலில் தீர்ப்பளிக்கும் நாட்டாமையாக நடித்து இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றினார். அதன் பிறகு இந்த படம் தெலுங்கில் ‘பெத்தராயுடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

கிழக்குச் சீமையிலே: 1993-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்குச் சீமையிலே படத்தில் நெப்போலியன், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கதாநாயகன் நெப்போலியனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு விஜயகுமார் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்ட இருப்பார். இதில் அண்ணனாக விஜயகுமாரும் தங்கையாக ராதிகாவும் தங்களுக்கு இடையே இருக்கும் பாசப் போராட்டத்தை வெளிக்காட்டி பட்டி தொட்டி எங்கும் இந்தப் படத்தை சூப்பர் ஹிட் அடிக்க வைத்தனர். குறிப்பாக விஜயகுமாரின் நடிப்பு சிலிர்ப்பூட்டும் வகையில் இருக்கும்.

நட்புக்காக: சரத்குமார் இரு வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் சிம்ரன், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இந்தப் படத்திலும் சரத்குமாரை ஓரம் கட்டும் அளவிற்கு விஜயகுமாரின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கும்.

தாமிரபரணி: ஹரி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் விஷால் கதாநாயகனாகவும் பானு, பிரபு, நதியா, நாசர், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இதில் விஜயகுமார் வில்லனாக நாசரின் அண்ணனாக படத்தின் விறுவிறுப்பை கூட்டும் நபராக இருந்து படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருப்பார். அத்துடன் இவருடைய கணீர் குரலினால் கொடூரமாக பேசும் ஒவ்வொரு டயலாக்கும் பார்க்கும் ரசிகர்களை பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.

கோவா: வெங்கட் பிரபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான கோவா திரைப்படத்திலும் நாட்டாமையாக விஜயகுமார் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். இந்த காலக்கட்டத்திலும் நாட்டாமை என்றால் யார் என்பதை அறிந்திராத இளையோருக்கு, அந்தக் காலத்து நாட்டாமையை தத்ரூபமாக கண்முன் காட்டி இருக்கும் விஜயகுமாரின் கெட்டப் இந்தப்படத்தில் நடித்த கேரக்டர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கும்.

இவ்வாறு கதாநாயகர்களை மிஞ்சி செம்பு நாட்டாமை விஜயகுமார் பட்டி தொட்டி எங்கும் ஓடிய திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் அடிக்கடி பார்க்கக்கூடிய திரைப்படமாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்