விஜயகாந்துடன் நான் இருந்திருந்தால் அவரை முதல்வராக்கி இருப்பேன்.. பிரபல வில்லன் ஓபன் டாக்.!

தமிழ்சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து படங்களிலும் நடித்து வந்தார். இவரது குரலும், உடல் மொழியும் ஒரு முரட்டுத்தனமான வில்லனுக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது. எனவே வில்லன் என்றாலே மன்சூர் அலிகான் தான் என்னும் அளவிற்கு அனைத்து படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது படங்களில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் ஏதாவது ஒரு சர்ச்சையை சொல்லி அவ்வபோது மீடியாவுக்கு தீனி அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் நடிகரும், தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், விஜயகாந்தை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதாவின் பானி இல்லாமல் தனக்கென தனி பானியை உருவாக்கியவர் விஜயகாந்த். அவருடன் அரசியலில் இணைந்து பயணிக்க முடியாதது வருத்தமே. விஜயகாந்தை சந்தித்தேன். என்னை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

விஜயகாந்த் முதலமைச்சராகியிருக்க வேண்டும். வசன கர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் எனும் இரண்டு கான்களும் அவருடன் இணைந்து பயணித்திருந்தால் விஜயகாந்த் இப்போது முதலமைச்சராக இருந்திருப்பார். கொரோனா என்ற ஒன்று இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர்” என கூறியுள்ளார்.

mansoor-ali-khan
mansoor-ali-khan

முன்னதாக நடிகர் விவேக் இறந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் அவர் இறந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருந்தார். எனவே நீதிமன்றம் அவரை கடுமையாக கண்டித்து அபராதம் விதித்து இருந்தது. அப்போது இனிமேல் கொரோனா குறித்து எந்த ஒரு கருத்தையும் கூற மாட்டேன் என மன்சூர் அலிகான் கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்