தளபதி 66 பட இயக்குனர் பற்றிய விவரத்தை கசியவிட்ட பிரபலம்.. கடுப்பான விஜய்

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆனால் பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பை விட விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தின் எதிர்பார்ப்பு தான் தற்போது விஜய் ரசிகர்களிடம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் முதல் முறையாக விஜய் நேரடியாக ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளது தான் என்கிறார்கள்.

விஜய்யின் தளபதி 66 படத்தை முதலில் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக கூறினர். ஆனால் கடந்த சில மாதங்களாக விஜய்யின் தளபதி 66 படத்தை தெலுங்கு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜு விஜய்யின் தளபதி 66 படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தை தோழா, மகரிஷி போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிபல்லி என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

வதந்தியாக வந்த இந்த செய்தியை கன்ஃபார்ம் பண்ணினார் பாடகர் கிரிஷ். இவர் முன்னாள் நடிகை சங்கீதாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு குடும்ப விழாவில் கிரிஷ் மற்றும் வம்சி இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வம்சியின் பிறந்த நாளைக்கு பகிர்ந்து விஜய்யின் தளபதி 66 படத்திற்கு வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார் கிரிஷ்.

இந்த செய்தி வெகு வேகமாக பரவ உடனடியாக அந்த பதிவை நீக்கி விட்டார். இதை கேள்விப்பட்ட விஜய் செம அப்செட்டில் இருக்கிறாராம். முதல் முறையாக ஒரு நேரடி பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ள அறிவிப்பை மிக பிரம்மாண்டமாக அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் இப்படி சர்வ சாதாரணமாக சொன்னது விஜய் தரப்புக்கு மட்டுமில்லாமல் மொத்த படக்குழுவும் கொஞ்சம் அப்செட்தானாம்.

thalapathy66-cinemapettai
thalapathy66-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்