துப்பாக்கி என்ற மாபெரும் வெற்றி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கிய திரைப்படம்தான் கத்தி. விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவான இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது.
விவசாயத்தை அடிப்படையாக வைத்து உருவாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் முதல் முதலாக இளம் இசையமைப்பாளராக களமிறங்கி பட்டிதொட்டியெங்கும் தன்னுடைய பாடல்களாலும் பின்னணி இசையாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் அனிருத்.
அனிருத்துக்கு முதல் முதலில் பெரிய படத்தை தூக்கி கொடுத்தது விஜய் தான் என்பதும் கூடுதல் தகவல். மேலும் இந்த படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய செல்பிபுள்ள பாடல் பட்டிதொட்டியெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது.
ஆனால் இதே கத்தி படத்தில் வில்லனுக்கான தீம் மியூசிக் ஒன்றில் விஜய் பாடியுள்ளது பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்துள்ளது. கத்தி படத்தில் வந்த பிஜிஎம் அனைத்தும் ரசிகர்களின் இன்றைய செல்போன் ரிங் டோனாக இருப்பதையும் பார்க்கிறோம்.
அந்தவகையில் வில்லனுக்கான தீம் மியூசிக்கில் விஜய் ஜதி பாடியிருப்பார். விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்த விஷயம் தெரிந்த நாளும் பெரும்பாலானோருக்கு இந்த இசையில் விஜய் ஜதி பாடியிருக்கும் மேட்டர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
