செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக் மூலம் ஹீரோவாகும் விஜய் மகன் சஞ்சய்.. 3 நாளில் 50 கோடி வசூலித்த படமாச்சே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் மகன் சஞ்சய் விரைவில் சூப்பர் ஹிட்டான தெலுங்கு பட ரீமேக் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி 66 படத்தை சஞ்சய் இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் சஞ்சய் கனடா நாட்டில் சினிமா இயக்கம் பற்றிய படிப்பு தான் படித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இயக்குனராவதை விட ஹீரோவாக தனது மகனை அறிமுகப்படுத்த விஜய் மிகவும் ஆசைப்படுகிறாராம். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகி மூன்று நாளில் 50 கோடி வசூலை குவித்த புதிய படமொன்றில் சஞ்சய்யை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

தெலுங்கில் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று கோடிக்கணக்கில் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் உப்பண்ணா. புதுமுக நடிகர் நடிகைகள் நடித்தாலும் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார்.

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற உப்பண்ணா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் மகன் சஞ்சய் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக விஜய் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

uppenna-cinemapettai
uppenna-cinemapettai

மேலும் ஏற்கனவே கூறியதுபோல் உப்பண்ணா படத்தின் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியுள்ளதாகவும், அவர்தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தயாரிப்பாளர் வேறு யாராக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறாராம் விஜய்.

- Advertisement -

Trending News