பாலிவுட்டில் தனுசை ஓரம் கட்டும் விஜய் சேதுபதி.. அடுத்த குறி ஹாலிவுட் தான்!

தமிழ் சினிமாவில் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்களில் முன்னணியில் இருக்கும் தனுஷ் கடந்த சில மாதங்களில் ஓவர்டேக் செய்து விருவிருவென முன்னேறிக் கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி. இதனால் விஜய்சேதுபதியின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டதாம்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜயின் கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் ரசிகர்களிடையே செம வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ரீமேக் ஆகும் மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இது ஒருபுறமிருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படமான மாநகரம் படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கத்ரீனா கைஃப் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது.

மேலும் பாலிவுட் பிரபல நடிகர் ஒருவருடன் சேர்ந்து அமேசான் தளத்திற்காக ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு சில பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்க வைக்க அங்குள்ள முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏன் அமீர்கான் நடித்து கொண்டிருக்கும் படத்தில் கூட விஜய் சேதுபதி முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முடியாததால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இதுவரை பாலிவுட் சினிமாவில் மூன்று படங்கள் நடித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி ஒரே வருடத்தில் அவருடைய மூன்று பல சாதனைகளையும் ஓரம்கட்டிவிட்டு தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடிக்கும் தமிழ் நடிகர் என்ற பெருமையுடன் வலம் வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் சம்பளமும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளதாம்.

vijaysethupathi-dhanush-cinemapettai
vijaysethupathi-dhanush-cinemapettai

சீரியல் மற்றும் சினிமாக்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக ஒரு மாறி தற்போது பிளாக்பஸ்டர் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி அடுத்ததாக ஹாலிவுட்டில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்