கமல் பாதி, லோகேஷ் பாதி கலந்த கலவைதான் இந்த விக்ரம்.. படம் இப்படித்தான் இருக்கும் என்ற விஜய் சேதுபதி

இப்போது விஜய், அஜித், ரஜினி ஆகியோரின் படங்களை விட கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் விக்ரம் படத்தின் மீது தான் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதற்கு காரணம் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பது தான்.

மூன்று பேருமே தலை சிறந்த நடிகர்கள் என்பதால் இந்த படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை ரசிகர்கள் அறிவிப்பு வந்த நாளிலிருந்து யோசிக்காத நேரமே இல்லை. அதற்கு தகுந்தாற்போல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பட்டையை கிளப்பியது.

விருமாண்டி சாயலில் இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ரசிகர் என்பதால் அதை பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை. முதலில் விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து சம்பளம் காரணமாக விலகிவிட்டதாக பல செய்திகள் வெளியானது.

ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி இடம் பெறுவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது விக்ரம் படத்தை பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு கமலும் லோகேஷும் கலந்த கலவைதான் இந்த விக்ரம் எனக்கூறியுள்ளார் விஜய் சேதுபதி. அதேபோல் கமல் சார் படங்களில் உள்ள ஆழமான கதைக்கரு, அதே சமயத்தில் லோகேஷ் கனகராஜ் படங்களின் மாஸ் ஆகியவை கலந்து செம்ம பிரம்மாண்டமாகவும் செம மாஸாகவும் இந்த படம் வர உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள்? என்று கேட்டபோது அது சஸ்பென்ஸ் என்று கூறி நகர்ந்து விட்டார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி அடுத்ததாக சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vijay-sethupathy-cinemapettai
vijay-sethupathy-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்