விஜய் சேதுபதி கடந்த இரண்டு வருடங்களாக தனக்கு வந்த எல்லா படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார். ஆனால் தற்போது ஏற்கனவே ஒப்பந்தமான படங்களை தவிர புதிதாக எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தம் செய்யாமல் உள்ளாராம். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படம் வெளியானது.
இப்படத்தின் கடைசி காட்சியில் கூட விஜய் சேதுபதி கத்ரினா கைஃப்வை விரும்புவது காட்சி வரும். சூசகமாக தான் அந்த காட்சியை விக்னேஷ் சிவன் வைத்துள்ளார். மேலும் இந்த காட்சிக்கு முறையாக அனுமதி வாங்கி தான் எடுத்தார்களாம்.
ஏனென்றால் தற்போது விஜய் சேதுபதி மும்பை சென்று வரிசையாக ஐந்து ஹிந்தி படங்களில் நடிக்க வருவாராம். அதில் ஒன்றுதான் மேரி கிறிஸ்மஸ் படம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறாராம். இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பைகார் படத்தில் விஜய் சேதுபதி நடித்த முடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. மேலும் ஃபேமிலி மேன் இயக்குனர்களின் ஃபார்ஸி படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் இரண்டு ஹிந்தி படங்களிலும் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் மொத்தமாக ஐந்து ஹிந்தி பட வாய்ப்புகள் விஜய்சேதுபதி கைவசம் உள்ளது. தற்போது பாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதி பாலிவுட்டில் கலக்கி வருகிறார். ஆனால் இது தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்கள் தமிழில் வெளியான நிலையில் தற்போது பாலிவுட் பக்கம் விஜய்சேதுபதி கவனம் செலுத்துவதால் தமிழில் அவருடைய படங்களின் எண்ணிக்கை மிகக் குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் கமலஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி உள்ள விக்ரம் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.