தளபதி விஜய் பெயரை கெடுத்த 7 படங்கள்.. அப்பாவும் இதற்கு உடந்தையா!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று தளபதி விஜய் அவர்களின் திரைவாழ்க்கையின் கருமை நிறைந்த படங்களை காணலாம். இந்த படங்கள் பெரிய தோல்வியாகவோ அல்லது, மக்கள் நிராகரித்ததாகவோ இருக்கலாம்.

நாளைய தீர்ப்பு: ஆரம்பமே சரி இல்லையப்பா, என்பது போல சிறுவனாக நடித்துக்கொண்டு இருந்த விஜய் அவர்கள் முதல் முறையாக ஹீரோ பாத்திரம் ஏற்றிருந்த படம் நாளைய தீர்ப்பு. இந்த படம் வந்த பிறகு விஜய் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள். இந்த முக அமைப்பிற்கு ஹீரோ கேட்குதா? தந்தை தயாரிப்பாளர், இயக்குனர் என்றால் யாரு வேண்டுமானால் நடிக்க வந்துடலாமா? என்பது போன்றவை. அவ்வளவு ஏன் தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் கூட விஜயை ஒரு ஹீரோ மெட்டீரியலாக பார்க்கவே இல்லை என்பதே உண்மை. பின்னர் பல படங்களை அவரை வைத்து எடுத்து வேறு கதை. தற்போதைய சூழ்நிலையில் விஜய் அவர்கள் தவிர்க்க முடியாத வசூல் சக்கரவர்த்தி.

ரசிகன்: விஜய் அவர்களின் திரைப்படங்களிலேயே மிகவும் ஆபாசமான படம் என்று வேண்டுமானால் இதை குறிப்பிடலாம். கதையையோ அல்லது ஹீரோவையோ நம்பாமல், சங்கவியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்தில் அவர் பாத்ரூமில் குளிக்கும்போது சோப்பு போடும் அளவுக்கு தரம் தாழ்ந்து காட்சிகள் வைத்தார் விஜயின் தந்தை சந்திரசேகர். வக்கிரத்தின் உச்சமாக மாமியாராக வரும் ஸ்ரீவித்யாவிற்கு சோப்பு போடுவது போலவும் காட்சிகள் உண்டு என்றால் என்ன சொல்ல? ஒரு தந்தை தனது மகனை வைத்து எடுக்க கூடாத காட்சிகளை எடுத்தார்.

தேவா: மீண்டும் ஒரு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படம். இந்த படத்தில் சங்கவியின் கவர்ச்சிக்கு பதிலாக ஸ்வாதியின் கவர்ச்சி. மத்தபடி கதை எல்லாம் தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த காதல் கதை தான். இந்த படத்தில் தமிழ் சினிமாவின் கேவலமான ஒரு பாடல் இடம் பெற்றது. அது தான் மருமகனே.. என்னும் பாடல். இந்த பாடலின் இறுதியில் சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா என்று மாமனார் கேட்க, அத்தை மட்டும் போதும்… என்று சொல்லுமாறு கேவலமாக எழுதி இருப்பார்கள். இந்த படமே முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது என்றால் அது மிகை அல்ல.

செந்தூர பாண்டி: தன்னை வைத்து ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்கிற மாபெரும் ஹிட் கொடுத்த இயக்குனர் என்பதால், காசு கூட வாங்காமல் விஜயகாந்த் சிறப்பு தோற்றம் கொண்ட படம் செந்தூர பாண்டி. இதில் நாயகன் விஜய், அறிமுக நாயகி யுவராணியை சில்மிஷம் என்னும் பெயரில் மானபங்கம் செய்யும் அளவுக்கு காட்சிகள் இருக்கும். முதல் பாகம் முழுக்க முழுக்க யுவராணியின் கவர்ச்சியே நிறைந்து இருக்கும்.

விஷ்ணு: தந்தையின் இயக்கத்தில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமான விஜயின் மற்றொரு படம் விஷ்ணு. கதை என்று பெரிதாக இல்லை. இதில் மீண்டும் சங்கவின் கவர்ச்சி தான் மூலதனம். இந்த படத்தின் போது அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூட செய்தி உண்டு. இந்த படத்தின் பாடல்களில் கவர்ச்சி நிரம்பி வழியும். இந்த படத்தில் சங்கவியும் விஜய்யும் ஆற்றில் பேசிக்கொள்ளும் சீனை பார்க்கவே பல இளம் ரசிகர்கள் முண்டியடித்தனர் என்பது மறக்க முடியாத கிளுகிளு நினைவுகள்.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை: அகைன் விஜய் – சங்கவி ஜோடி; கிளு கிளு காட்சிகள். சங்கவியின் தாராள மனசு, இளம் நெஞ்சங்களை திரை அரங்கிற்கு அழைத்து வந்தது. படத்தின் இயக்குனர் ரங்கநாதன், இசை வித்யாசாகர் என்று சில மாறுதல்கள். மேலும் படத்தில் கவுண்டமணி- செந்திலின் நகைச்சுவை மிகப்பிரபலம். இதனால் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இந்த படம் வரை விஜய் அவர்களை பிட்டு பட நடிகர் போலவே கருதினர் என்றால் அது பொய்யல்ல.

நெஞ்சினிலே: கொஞ்சம் கொஞ்சமாக பிட்டு பட நடிகர் என்ற பெயரில் இருந்து வெளிவந்தார் விஜய். அதற்கு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் உதவி புரிந்தன. அந்த நேரத்தில்தான் மீண்டும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் நெஞ்சினிலே படத்தில் நடித்தார். மிக மிக பழமையான கதையை மிக மிக பழமையாக இயக்கி மக்களை சோதித்தார். மேலும் இந்த படத்தில் விஜய்யை உசுப்பேத்தும், கவர்ன்மென்ட், டீனேஜ்களின் முதல்வர் என்றெல்லாம் ஏற்றிவிட்டார். மக்கள் இந்த படத்தை முற்றிலுமாக புறக்கணித்தனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்