அந்த மாதிரி வேண்டாம்.. தளபதி 66 படக்குழுவிற்கு விஜய் போட்ட கட்டளை

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வெற்றியும், தோல்வியும் சினிமாவில் சகஜம் என விஜய் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தோல்விக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பிலும் செயல்பட்டு வருகிறார்.

விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைல இயக்குகிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 70% ஹைதராபாத்தில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் விஜய் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் தான் எடுக்க வேண்டும் என கூறியுள்ளாராம். ஏனென்றால் சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் இங்குள்ள பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் என்ற நோக்கில் விஜய் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக்கேட்ட பெப்ஸி ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய், தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்காமல் மற்றவர்களுக்கும் வாழ்வு கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு பரந்த மனம் உடையவர். அதை அவ்வப்போது நிரூபித்து வருவார். அவ்வாறு பெப்ஸி ஊழியர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக விஜய் தனது படபிடிப்பை சென்னையிலேயே நடத்த திட்டமிட்டு இருப்பது பலராலும் பாராட்டப்படுகிறது.

மேலும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்புக்காக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிரமாண்டமான செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பணிகள் முடிந்தவுடன் விரைவில் தளபதி 66 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தயாராக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்