தோனியுடன் கூட்டணி போடும் விஜய்.. யாரும் எதிர்பார்க்காத தளபதி-70 அப்டேட்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் முக்கிய முகங்களாக பல பேர் இருந்தாலும் ஒரு சில வீரர்கள் மக்களின் மனதில் ஹீரோக்களாக வாழ்வர் அதில் ஒருவர்தான் தோனி இந்திய கிரிக்கெட் அணியை மற்ற நாடுகள் பொறாமைப்படும் அளவிற்கு உயர்த்தியவர். சில பல பிரச்சினைகள் மத்தியில் நல்ல பெயருடன் விடைபெற்று சென்றார்.

விளம்பர படங்களில் நடித்து வந்த தோனி அதிலும் அதிகமாக சம்பாதித்தார். அனைத்திலும் புதுமையை விரும்புபவர் இப்பொழுது எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத ஒரு முயற்சியை டோனி செய்திருக்கிறார். விளையாட்டு வீரர்கள் சினிமாவில் நடிப்பார்கள் ஆனால் இவர் அதையும் தாண்டி சினிமாவை தயாரிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்து இப்போது உறுதியாகியுள்ளது.

Also Read : தோனி பிரதமர்.. விஜய் முதல்வர்.. ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

அதுவும் நமது தமிழ்நாட்டில் சென்னையில் முகாமிட்டு அலுவலகத்தை தொடங்கியுள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளத்திலும் திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். பாலிவுட் சினிமா அதல பாதாளத்தில் இருந்து கொண்டிருக்கின்றது அங்கு இவரது கவனத்தை செலுத்தாமல் தென்னிந்திய திரைப்படங்களின் மீது ஈர்ப்பு வந்தது பாராட்டத்தக்கது.வட இந்தியரிடம் பல கோபத்தை வரவழைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் யாரும் எதிர்பார்க்காத இவரது படத்தின் முதல் ஹீரோ விஜய் என்று உறுதியாகி உள்ளது. இப்பொழுது விஜய்க்கு ராசியான நம்பர் 7 என்பதால் அவரது 70வது படத்தை தோனி அவர்கள் தயாரிப்பார் என்று முடிவாகி உள்ளது. அதேபோல் தெலுங்கிலும் மகேஷ்பாபுவை ஒப்பந்தம் செய்துள்ளார். ஒவ்வொரு மொழியிலும் உள்ள முக்கியமான கதாநாயகர்களை தட்டி தூக்கி உள்ளார் தோனி.காரணம் தோனி மீது உள்ள மரியாதை நிமித்தமாக அனைவரும் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

Also Read : தளபதி தல தோனி நேரில் சந்திப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டை தாண்டி சென்னை கிரிக்கெட்டில் விளையாடும் போது அவர் தமிழ்நாட்டின் மக்கள் மீதும் முக்கியமாக தலைநகர் சென்னையை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார் என்பது தெரியும். அதன் காரணமாகவே அவரது அலுவலகத்தை சென்னையிலுள்ள ஈ.சி.ஆர் இல் தொடங்கி உள்ளார் என்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வட இந்தியர்கள் இனிமேல் இவரை பிடிக்காமல் போவதற்கு காரணங்கள் இருந்தாலும் அவர் அதை பற்றி கவலை கொள்ளாமல் தென்னிந்தியாவிற்கு வந்து அதும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அனைத்து படங்களையும் தயாரிக்க இருப்பது பல கருத்துக்களை உருவாக்கினாலும் இது ஒரு நல்ல விதமாகவும் சினிமாவிற்கு ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. தோனிக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவரது வெற்றி சினிமாவிலும் தொடர வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை.

Also Read : லோகேஷை குழப்பி விட்ட தளபதி 67 பட போஸ்டர்.. இதைவிட தரமா காமிக்க முடியுமா என சவால்?

- Advertisement -spot_img

Trending News