Vijayakanth: இறந்தும் பசிப்போக்கும் கேப்டன்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு கிடைத்த உலக சாதனை விருது

Vijayakanth: கடந்த வருடத்தின் இறுதி தமிழக மக்களுக்கு சோகம் நிறைந்ததாக இருந்தது. கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறைவின் காரணமாக டிசம்பர் 28ஆம் தேதி உயிர்நீத்தார்.

அவருடைய உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து இறுதியஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதற்கு மறுநாளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நினைவு இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு கிடைத்த கௌரவம்

அதன்படி கேப்டன் மறைந்து 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதேபோல் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவிடம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

vijayakanth
vijayakanth

அதை கௌரவிக்கும் வகையில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவரின் குடும்பத்தினருக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம் ஆகும்.

மேலும் உயிரோடு இருக்கும்போது விஜயகாந்த் யாரையும் பசியால் வாட விட மாட்டார். அவருடைய குடும்பத்தினர் அதை இப்போதும் தொடர்ந்து வருகின்றனர். இதுவே இந்த விருதுக்கு காரணமாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்