தளபதி 67 விஜய்க்கு எழுதப்பட்ட கதை இல்லையாம்.. லோகேஷ் செய்யும் தரமான சம்பவம்

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து தளபதி 66 படத்தை வம்சி இயக்குகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் விஜய் உடன் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இணையுள்ளார் என்ற தகவல் வெளியானது.

அதாவது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவியது. இந்நிலையில் தற்போது தலைவர் ரஜினிகாந்துக்கு எழுதப்பட்ட கதையில்தான் விஜய் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அப்போது லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் இயக்கயுள்ளார் என கூறப்பட்டது.

மேலும் இப்படத்தை கமலஹாசன் தயாரிக்கிறார் என்றும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமலும் நடிப்பார் என கூறப்பட்டது. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு கமல், ரஜினி இருவரும் ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் இதற்கான வேலைகளை தொடங்கியபோது ரஜினி இப்படத்தில் நடிக்க விருப்பமில்லை என சொல்லியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. விக்ரம் படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினிக்காக எழுதிய கதையை விஜய்யிடம் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

விஜய்க்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மாஸ்டர் படத்தையும் லோகேஷ் கொடுத்துள்ளார். மேலும், கதை நன்றாக இருப்பதால் விஜய்யும் ஓகே சொல்லி உள்ளார். ஆனால் படத்தில் சில மாற்றங்கள் செய்து விஜய்க்கு ஏற்றாற்போல் இப்படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

இந்நிலையில் தலைவர் கதையில்தான் தளபதி நடிக்கயுள்ளார் என்ற செய்தி இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. ஆனாலும் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் உருவாவது உறுதி என விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Next Story

- Advertisement -