சன் பிக்சர்ஸ் வேண்டாம், நான் இருக்கேன் வாங்க.. விஜய்க்கு பணத்தாசை காட்டும் தயாரிப்பாளர்

thalapathy65
thalapathy65

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்கி வருகிறார்.

தளபதி 65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் எடுத்து முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் தற்போது கொரானா பாதிப்பு அதிகமாக இருப்பதால் விஜய் படப்பிடிப்பை நிறுத்தச்சொல்லி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில் விஜய் தன்னுடைய தளபதி 66 படத்திற்கான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இதுவரை தளபதி 66 படத்தை மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது எனக் கூறிவந்தனர்.

ஆனால் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவை சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ விஜய்யிடம் அதிக நட்புறவு வைத்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தினமும் குட் மார்னிங் குட் நைட் சொல்லாத குறைதானாம்.

மற்றபடி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது போன் செய்து விஜய்யிடம் அடுத்த படத்தை பற்றி பேசி வருகிறாராம். விஜய்யை இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் நாயகனாக மாற்றப்போவதாக ஆசைகாட்டி வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் அவர் தயாரித்த பல படங்களில் நடித்த நடிகர்களுக்கு தற்போது ஹிந்தியில் மிகப்பெரிய மார்கெட் உருவாகியுள்ளது. அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை விட அதிக சம்பளம் தருவதாகவும், படத்தை பல மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யலாம் எனவும் கூறி வருகிறாராம். மேலும் அந்த படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் இந்த செய்தி கடந்த சில வாரங்களாக வட்டமிட்டு வருகிறது.

thalapathy66-cinemapettai
thalapathy66-cinemapettai
Advertisement Amazon Prime Banner