விஜய் டிவியின் மானத்தைக் காப்பாற்றிய பாரதிகண்ணம்மா.. டிஆர்பி-யில் தும்சம் செய்த சன் டிவி!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை அனுதினமும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங் தெரிந்துவிடும். அந்தவகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதில் எப்பொழுதுமே முதலிடத்தைப் பிடிக்கும் சன் டிவியின் கயல் சீரியல் இந்த வாரமும் தன்னுடைய இருப்பை தக்க வைத்து டாப் இடத்தை பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அதே சன்டிவியின் சுந்தரி சீரியல் இரண்டாம் இடமும், அண்ணன்-தம்பி பாசத்தை அழகாக காண்பிக்கும் வானத்தைப்போல சீரியல் மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

நான்காவது இடம் ஆக்ஷன்-காதல் கலந்த சீரியல் ஆன சன் டிவியின் ரோஜா பெற்றிருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து நான்கு இடத்தை தக்கவைத்துக் கொண்ட சன் டிவியுடன் கடும் போட்டி போட்டு 5-வது இடத்தை விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் பெற்றிருக்கிறது.

ஆறாவது இடம் சன்டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கும், ஏழாவது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து எட்டாமிடம் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் பெற்றிருக்கிறது.

ஒன்பதாவது இடம் சன்டிவியின் புத்தம்புது சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. பத்தாவது இடம் விஜய் டிவியின் ராஜா ராணி2  சீரியலுக்கும், பதினோராவது இடம் சன் டிவியின் அபியும் நானும் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

இதையடுத்து விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும், சன்டிவியின் அன்பே வா, விஜய் டிவியில் மௌனராகம் 2, சன்டிவியின் பாண்டவர் இல்லம், சித்தி 2 போன்ற சீரியல்களும், விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே2 சீரியலும் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கிறது.

Next Story

- Advertisement -