பீஸ்ட் படத்திற்கு ஏற்பட்ட சோதனை.. செக் வைத்த உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படமும், கன்னட நடிகர் யாஷின் கேஜிஎப் 2 திரைப்படமும் அடுத்தடுத்து வெளிவந்த நிலையில் பீஸ்ட் படத்தைவிட கே ஜி எஃப் 2 படத்திற்கு அதிக மவுசு கூடியுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கே ஜி எஃப் 2 திரைப்படத்தை அதிக திரையில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் பல திரையரங்கு உரிமையாளர்கள் கே ஜி எஃப் 2 படத்தை மட்டும் தங்களது திரையரங்குகளில் காட்சிப்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு பீஸ்ட் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் டிஸ்ட்ரிபியூட்டர் ஆன ரெட் ஜெயன்ட் மூவீஸின் உதயநிதி ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சவுக்கு ஷங்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய்,பூஜா ஹெக்டே, யோகி பாபு,செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தின் தியேட்டர் டிஸ்ட்ரிபியூட்டர் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.

அதே சமயத்தில் பீஸ்ட் படத்திற்கு மறுநாள் திரையிடப்பட்ட கேஜிஎப் 2 திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு டிஸ்ட்ரிபியூட்டராக ட்ரீம் டீம் வாரியர்ஸ் பொறுப்பேற்றது. இந்த நிலையில் டீஸ்ட் படத்தை விட கே ஜி எஃப் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவதால் பீஸ்ட் படத்தின் திரையரங்குகள் காலியாக உள்ளது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் கே ஜி எஃப் 2 திரைப்படத்தை மட்டும் திரையில் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளனர்.

இத்திட்டத்தை புரிந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், பீஸ்ட் படத்தை திரையில் திரையிட வில்லை என்றால் என்னுடைய அடுத்த அனைத்து டிஸ்ட்ரிபியூட்டர் திரைப்படங்களும் எந்த திரையரங்கம் பீஸ்ட் படத்தை திரையிடவில்லையோ,அந்த திரையரங்கிற்கு அடுத்த மெகா பட்ஜெட் திரைப்படங்களை வழங்க முடியாது என தியேட்டர் உரிமையாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அடுத்த 5 வருடங்களுக்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரையரங்கிற்கு திரையிடப்படும் என சவுக்கு சங்கர் திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது மெகா பட்ஜெட் திரைப்படங்களை தமிழகத்தில் உள்ள பல திரையரங்கிற்கு டிஸ்ட்ரிபியூட் செய்து வருகிறது. குறிப்பாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களையும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு திரைப்படங்களையும் அதிக அளவில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரையரங்கிற்கு வழங்கி வருகிறது.

இதனிடையே தற்போது உதயநிதி ஸ்டாலின் பீஸ்ட் படத்தை திரையரங்குகளில் முறையாக திரையிட வில்லை என்றால் தன்னுடைய அடுத்த திரைப்படமான உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் திரையரங்கிற்கு வழங்க முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளது சரியான முறை இல்லை என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் பல திரையரங்கு டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலினால் வாய்ப்புகள் கிடைக்காமல் அதிக நஷ்டம் ஏற்படுவதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்