fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

4 டைட்டிலை பதிவு செய்த விஜய் 66 படக்குழு.. கப்சிப்னு கம்முனு இருக்கும் இளையதளபதி

thalapathy-66-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 டைட்டிலை பதிவு செய்த விஜய் 66 படக்குழு.. கப்சிப்னு கம்முனு இருக்கும் இளையதளபதி

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை முடித்த கையோடு தளபதி விஜய் தனது 66-வது படத்தில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் படமாகவே இருக்கும் என ஏற்கனவே தயாரிப்பாளர் அறிவித்த நிலையில் எப்போதுமே விஜய் மாஸ் ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை தர இருக்கிறது.

தற்போது தளபதி 66 படம் மும்மரமாக ஹைதராபாத்தில் சூட்டிங் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்பொழுது இந்த படத்திற்கு டைட்டில் வைக்கும் வேலைகள் படு மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் வாரிசு என்று ஒரு புரளி பரவி வருகிறது. அதற்கு காரணம் இந்த படம் ஒரு குடும்ப பின்னணி படம். இப்பொழுது இந்த படத்தில் எவ்வளவு சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்காக 4 டைட்டிலை ரிஜிஸ்டர் பண்ண சொல்லி இருக்கிறார்.

குடும்பம், வாரிசு, வம்சம் என சும்மா துண்டு துக்கடா டைட்டில்களை எல்லாம் பதிவு செய்து வருகிறார். விஜய்யும் கப்சிப்புனு சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணி வருகிறார். பொதுவாக தளபதி விஜயின் படங்களின் டைட்டில் ஃபயர்(fire) ஆக இருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள்.

ஆனால் தளபதி 66 படத்தின் டைட்டில் சீரியல் டைட்டில் போலவே இருக்கிறது என ரசிகர்கள் பதிவிடுகின்றனர். இருப்பினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் இப்படிப்பட்ட மொக்க டைட்டில்களை கொடுத்து அதன் பிறகு உண்மையான டைட்டில் எது என்பதை வெளியிட்டால்தான் இன்னும் படத்திற்கு கூடுதல் சுவாரசியம் ஏற்படும் என்பதற்காகவே இந்த வேலைகள் எல்லாம் நடக்கிறது.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

To Top