Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லிவ்விங் ரிலேஷன்ஷிப் ஜோடிக்கு எப்படி கல்யாணம் நடக்கும்.? விக்னேஷ், நயன் கொடுக்கும் டிப்ஸ்

nayan-vigneshshivan

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஒரு வழியாக திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பல வருடங்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல் இருந்த இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தற்போது அதற்கு ஒரு விடிவு காலம் வந்துள்ளது.

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா தனது மார்க்கெட் உள்ள போது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் குடும்பத்தில் இருந்து பலர் திருமணத்திற்கு அவசரப்படுத்தி வந்தனர்.

இந்த விஷயத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் இப்போது ஒருவழியாக நயன்தாரா திருமணத்திற்கு சம்மதித்து உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் பிரமாண்டமாக ரிசப்ஷனும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கியிருந்த அதே அபார்ட்மெண்டில் தான் ஆதி, நிக்கி கல்ராணி தங்கியிருந்தனர். இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் வருகின்ற மே 18ஆம் தேதி இவர்களது திருமணம் நடக்கயுள்ளது. இதனால் எக்மோரில் நயன்தாரா தங்கியிருக்கும் ஹைரைஸ் அப்பார்ட்மெண்டில் தனது காதலியுடன் தங்கினால் உடனே திருமணமாகும் என்று கோலிவுட்டில் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதனால் லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல் இருக்கும் பல பிரபலங்கள் அந்த அப்பார்ட்மெண்ட்க்கு படையெடுக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ ஒரு வழியாக நயன்தாரா கல்யாணத்துக்கு ஓகே சொன்னதே பெரிய விஷயம் என பெருமூச்சு விடுகிறார் விக்னேஷ் சிவன்.

Continue Reading
To Top