20 கிலோ குறைத்தும் உருவ கேலி செய்த ரசிகர்.. தரமான பதிலடி கொடுத்த வித்யூலேகா!

சினிமா துறையில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என்ற பல கோணங்களில் இருக்கிறது. ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் என்று தனித்துவம் உள்ளது. அந்த வகையில் ஒருவருடைய உருவத்தை வைத்து காமெடி பண்ணுவது என்பதும் வழக்கத்தில் உள்ளது.

அவ்வாறு நகைச்சுவை செய்தாலும் ரசிகர்கள் கேலி செய்தாலும் ‘டோன்ட் கேர்’ என்று ஈஸியாக எடுத்துக் கொள்பவர் தான் வித்யூலேகா. தமிழ் சினிமா திரைப்பட நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள் தான் வித்யூலேகா.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகர் ஆவார். கௌதம் மேனன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டில் வெளிவந்த நீதானே எந்தன் பொன் வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

அதில் சமந்தாவின் தோழியாக நடித்து இருப்பார். அதை எடுத்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருப்பார்.

வித்யூலேகா ஒரு பத்திரிகையில் அளித்துள்ள பேட்டியில் உடலை வைத்து நகைச்சுவை செய்தால் ரசிகர்கள் நிராகரித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார். வித்யூலேகா உடல் எடையை குறைத்து போட்டோவை வெளியிட்டுள்ளார்.

வாரத்திற்கு ஆறு முறை உடற்பயிற்சி, சரியான உணவு என்று கடின உழைப்பால் 20 கிலோ முதல் குறைந்துள்ளதாகவும் இருப்பினும் சிலர் உருவ கேலி செய்வதாக கூறியிருக்கிறார். அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாது, என்னை மட்டுமே திருப்தி படுத்திக் கொள்கிறேன். மேலும் சிலர் திரைக்குப் பின்னால் இருந்து கேலி செய்வதை தவிர வேறு என்ன தெரியும்? என்ற பதிவில் பகிர்ந்துள்ளார்.

vidyuraman
vidyuraman
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்