சினிமாவில் வெற்றி பெற்ற பலருக்கும் ஒரு சின்ன ஆரம்பம் தான் மையப் புள்ளியாக இருக்கும். அந்த வகையில் பல இயக்குனர்களும் முன்னணி இயக்குனர் பலரின் படங்களை பார்த்துவிட்டு சினிமாவுக்கு வருவார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் படத்தை கிட்டத்தட்ட 47 முறை பார்த்துவிட்டு சினிமாவில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வந்தவர்தான் இயக்குனர் வெற்றிமாறன்.
இன்று வெற்றிமாறன் படங்கள் என்றாலே தியேட்டருக்கு மக்கள் படை எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளனர். தன்னுடைய படங்களின் மூலம் சமூக கருத்துகளை பக்கா கமர்ஷியலாக சொல்வதில் படு கில்லாடி.
ஒரு சிலர் போல் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்காமல் பெரும்பாலும் படிக்கும் நூல்களில் இருந்து ஒரு சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு திரைக்கதை அமைத்து படம் இயக்கி வருகிறார். இதுவே வெற்றிமாறனின் வெற்றி எனவும் குறிப்பிடலாம்.
இப்படி சினிமாவில் டாப் உயரத்தில் இருக்கும் வெற்றிமாறனின் சினிமா கனவு எங்கே ஆரம்பித்தது தெரியுமா. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்திலிருந்து தான். நாயகன் படத்தை மட்டும் இதுவரை கிட்டத்தட்ட நாற்பத்தி ஏழு முறை பார்த்துள்ளாராம் வெற்றிமாறன்.

சினிமா பற்றி எதுவுமே தெரியாமல் நாயகன் படத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாராம். நாயகன் படம் பிடித்திருக்கிறது, இதுபோல் வருங்காலத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்ததாம். நாயகன் படத்திலிருந்து தான் தன்னுடைய சினிமா கனவு தொடங்கியதாக வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.