சிக்கவைத்து களி தின்ன வைக்கும் வெண்பாவின் அம்மா.. ஆடி போன மாப்பிள்ளை

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் நிச்சயமானது மட்டுமல்லாமல், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ரோகித் தான் அப்பா என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொள்ளாமல், பாரதியைதான் மீண்டும் துரத்துகிறார் வெண்பா.

தற்போது பாரதி கண்ணம்மாவின் குழந்தைகள் தனக்கு பிறந்தது தானா என்ற சந்தேகத்தை பத்து வருடங்களுக்குப் பிறகு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள நினைக்கிறார். இதற்காக இரண்டு குழந்தைகளின் இரத்தம் மாதிரிகளை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கொடுத்திருக்கிறார்.

Also Read: மண்டியிட்ட பாரதி.. வெளுத்து வாங்கும் கண்ணம்மாவின் மகள்

விரைவில் அதற்கான ரிசல்ட் வந்துவிடும். இந்த சூழ்நிலையில் ரோகித் பணக்காரன் என்று வெண்பா அவருடைய அம்மாவை ஏமாற்றியதை வெளிப்படுத்தியதால், அவரை அடியோடு வெறுக்கிறார்.

ஆனால் ரோகித் பலமுறை தான் செய்த தவறை ஒத்துக்கொண்டு வெண்பாவின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வருகிறார். அப்போதெல்லாம் அவரை வெறுத்து பேசிய வெண்பாவின் அம்மா, ஒருகட்டத்தில் ரோகித் தங்கியிருக்கும் சேரிக்கே சென்று பார்க்கிறார்.

Also Read: பிக்பாஸ் சீசன் 6 ஆண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. முதல் இடத்தில் இருக்கும் பிரபலம்

அவரை பார்த்ததும் ஆடிப்போன ரோகித், மீண்டும் மன்னிப்பு கேட்கிறார். அப்போது ரோகித் மிகவும் எதார்த்தமானவர், உண்மையாகவே வெண்பாவை மனதார காதலிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு இருவரது திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்கிறார் வெண்பாவின் அம்மா.

பிறகு ரோகித்தான் உன்னுடைய வருங்கால கணவர் என்று ஆணித்தரமாக வெண்பாவிடமும் கூறிவிடுகிறார். ஆனால் அந்த முடிவுக்கு துளிக்கூட சம்மதிக்க மறுக்கிறார் வெண்பா. உடனே வெண்பாவின் அம்மா ஏற்கனவே வெண்பாவை ஜெயிலில் இருந்து காப்பாற்றியதால், மகள் கூட என்று பார்க்காமல் மறுபடியும் சிக்க வைத்து, களி தின்ன வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

Also Read: அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்க வந்த வைல்ட் கார்ட் என்ட்ரி.. சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு

வேறு வழி இல்லாமல் வெண்பா ரோகித்தை திருமணம் செய்து கொள்ளவும் ஒத்துக்கொள்கிறார். இதன் பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி அந்த டெஸ்ட் ரிப்போர்ட் மூலம் கண்ணம்மாவின் குழந்தைகள் தனக்கு பிறந்தவர்கள் தான் என்பதை தெரிந்து கொள்வார்.