வாரிசு, துணிவால் தியேட்டர் உரிமையாளரை தட்டி தூக்கிய போலீஸ்.. இது என்ன புது உருட்டா இருக்கே

வாரிசு, துணிவு இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வாரிசு படத்தில் செண்டிமெண்ட், நகைச்சுவை, டான்ஸ் என எதிர்பார்த்த அளவில் எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பாக அமைந்தது. அதே மாதிரி துணிவு படமும் பேங்க் ஹீஸ்ட் திரில்லர் மையமாக வைத்து எல்லாரையும் பார்க்கும் வகையில் அமைந்தது.

இதைத்தொடர்ந்து சேலம் டவுனில் உள்ள கீதாலயா என்ற சினிமா தியேட்டர் முன் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கட்டவுட், பேனர் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இதைப் பார்த்த போலீசார் தியேட்டர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் கொண்டாட்டத்தை ட்ரோன் கேமரா பயன்படுத்தி பதிவு செய்த ரமேஷ் மற்றும் ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also read: துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்.. தூக்கத்தை தொலைத்த அஜித்

ஏற்கனவே நேற்று அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பல்வேறு இடங்களில் போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயற்சித்து எந்தப் பக்கமும் நுழைய முடியாமல் மூச்சு விட கூட பலர் தவிர்த்து வந்தார்கள். இதனை அடுத்து கூட்ட நெரிசலில் சிக்கிய ஒருவர் ரத்த காயங்களுடன் அடிபட்டு சுயநலவு இன்றி மயங்கி விழுந்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தப் படத்திற்கு முறையான டிக்கெட் இருந்திருந்தும் படம் பார்க்க முடியாமல் இருந்த ரசிகர்கள் திரையரங்கு நிர்வாகத்திடம் முறையிட்டனர். ரசிகர்களின் கூட்டத்தால் திகைத்து இருந்த நிர்வாகிகள் திரையரங்கு வெளியில் இருக்கும் ரசிகர்களுக்கு அனுமதி மறுத்தனர். படத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Also read: வாரிசு, துணிவு முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கிங் என மீண்டும் நிரூபித்த தளபதி விஜய்

இவர்களை போலீசார் அடித்து வெளியே துரத்தி அனுப்பினார்கள். பின்பு அங்கே இருக்கும் அஜித் ரசிகர் அடங்காமல் போலீசுடன் மல்லுக்கட்டி வந்தார்கள். கூச்சல் குழப்பம் என கதி கலங்கி இருந்த திரையரங்கம். அனுமதி மறுக்கப்பட்டதால் அஜித் ரசிகர் ஒருவர் செருப்பு மற்றும் கற்களையே தூக்கி எறிந்து கட்டைகளை தூக்கிக் கொண்டும் திரையரங்குகளில் நுழைந்து ரகலையில் ஈடுபட்டு வந்தனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் தடியடி நடத்தி வந்தனர்.

இதற்கெல்லாம் காரணம் துணிவும் சரி, வாரிசும் சரி, ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ளதால் இத்தனை விளைவுகள் ஏற்பட்டு இருக்கிறது.நாம் விரும்பும் நடிகரே ரசிகனுமே தவிர ஆக்ரோஷமான செயலில் ஈடுபடக்கூடாது என்று பொதுமக்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Also read: அஜித் கட்ட அவுட்டுக்கு போட்ட மாலை இத்தனை லட்சமா? வாயைப் பிளந்து பார்த்த விஜய் ரசிகர்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்