அஜித்துக்கு திருப்தி அளிக்காத வலிமை.. இளம் இசையமைப்பாளரை தேடிச்சென்ற நிறுவனம்

அஜித்தின் 60வது படமாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் வலிமை. இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் தற்போது படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளது.

ஆனால் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்க, ஜிப்ரான் பிஜிஎம் போட்டுள்ளார். யுவனின் பிஜிஎம் திருப்தி அளிக்காததால் தான் ஜிப்ரானை பிஜிஎம் போட கூறியுள்ளார்கள். இருப்பினும் அம்மா பாடல் மற்றும் பிஜிஎம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

நடிகர் அஜித்திற்கும் வலிமை படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் திருப்தி இல்லையாம். இதனால் தற்போது அஜித் மூன்றாவது முறையாக மீண்டும் வினோத்துடன் கூட்டணி அமைக்கும் 61வது படத்திற்கு இசையமைக்க இளம் இசையமைப்பாளர் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

அஜித்தின் 61வது படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் தான் வாங்க உள்ளதாம். எனவே அவர்கள் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளார்களாம். ஆனால் இயக்குனர் வினோத்தோ ஜிப்ரான் தான் இசையமைக்க வேண்டும் என கூறி வருகிறாராம்.

இதனால் இசையமைப்பாளர் குறித்து ஆடியோ நிறுவனத்துக்கும் இயக்குனர் வினோத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. யார் வேண்டுமானாலும் இசையமைக்கட்டும் ஆனால் பாடல்களும் பிஜிஎம்மும் தரமாக இருக்க வேண்டும் என அஜித்தின் ரசிகர்கள் ஒருபுறம் கூறி வருகிறார்கள்.

விரைவில் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வரும் வலிமை படக்குழு இது புது தலைவலியாக இருந்து வருகிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்